பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவை அவன் தவிர்த்திருத்தல் வேண்டும். ஆல்ை, அந்தோ, ஆவல்ை தன் அழிவைத் தவிர்க்க முடியவில்லை. இதை நினைக் கும் போது அவன் பால் நமக்கு எல்லேயற்ற இரக்கம் தோன்று கிறது. கோவலன் கண்ணகியின் சிலம்புகளுள் ஒன்றை யெடுத்துக் கொண்டு அவளைப் பிரிந்து வருத்த மிகுதியால் தளர்ந்த நடை யோடு வீதியில் செல்கிருன் வீதியில் கொல்லர் நூற்றுவர் பின் தொடர வரும் பொற் கொல்லனைக் கண்டு அவனிடம் தன் சிலம்பைக் காட்டி அதன் விலையை மதிப்பிடுமாறு கேட்கிருன். வஞ்சக நெஞ்சம் படைத்த பொற்கொல்லன், அரசனிடம் சென்று, தேவியின் காற்சிலம் பைத் திருடிய கள்வன் கோவ லனே யென்று கூறுகிறன். மன்னன், கோவலனக் கெல்லுமாறு ஆணையிடு கிருன். ஊர்க்காப்பாளருள் ஒருவகிைய கல்லாக் களி மகன் சற்றும் சிந்தியாது கோவலனை வெட்டி வீழ்த்து கிருன். இங்ங்னம், அருங்குணச் செம் மலாக விளங்கும் கோவலன், தான் செய்த தவற்றை நினைந்து வருந்தியும் அவன், அழிவி லிருந்து தப்ப முடிய வில்லே இதல்ை அவனுடைய வரலாறு அவலத்திலும் அவலமாக முடிகிறது ! சச் சந்தன் ஏமாங்கத நாட்டு மன்னன்; அவன் அருளால் தருமன்; வள்ளன்மையால் வருணன்; பகைவனை அழிக்கும் ஆற்றலால் கூற்றுவன் ; கலையறிவால் அருகன்; அழகால் மன்ம தன்; இத்தகைய அருங்குணங்கள் வாய்ந்த பெருமன்னன், தன் மனைவிபாற் கொண்ட ஆருக் காதலி ல்ை, தன் அரச கடமைகளே மறந்து, அரசாங்கப் பொறுப்பைத் தன் முதலமைச்சகிைய கட்டியங்காரனிடம் ஒப்படைக்கிருன். கட்டி யங் காரன் மிக க் கொடியவன்; தன் ஆட்சி முறையை மறந்ததை விடக் கட்டியங்காரனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தது பெருந் தவருகும்; ஆல்ை தன் நயவஞ்சக ச் செயலால் கட்டியங் காரன் மன்னவனுக்கு త్థల్ల தோன்றுகிருன். இதை நினைக்கும்போது மன்னவன்பால் நமக் இரக்கம் தோன்றுகிறது. 304

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/312&oldid=743449" இலிருந்து மீள்விக்கப்பட்டது