பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவியோடு ஊடிக் கூலமறுகில் கலன் கவிழ்ந்த செய்தியறியாது பெற்ருேர் தந்த குலமுதலிழப்பை உணர்ந்து அதோடு பெற்ருேர் அமைத்துத் தந்த தனி மனே வாழ்வையும் அது வழிக் கண்ணகி யையும் நினைந்து குல முதல் அழிந்த அதிர்ச்சிச் செய்தியை ம ஜனவியிடம் கூறி ஆறுதல் பெற வந்து கூற அவளும் அதனே அறஞ்சார்ந்த நல்குரவு என்று ஏற்றுப் பரத்தைமை மறந்து தன்னிடம் அவன் இருந்ததாகக் கூறும் குலந் தருவான் பொருட் குன்றத்திற்கு இணையான சிலம்புள என்கின் ருள். அது கேட்ட அவனும் அச்சிலம்பை முதலாகக் கொண்டு கடலில் இழந்த மரக் கலன்களே ஈட்டுதல் உற்றேன் என்று கூறி மதுரை புகுகின் ருன் என்று கொண்டால் மேற் குறித்த வினக்கள் எழா? கோவலன் பொருளிழப்புக் கூற, கண்ணகி அணிகளேத் தர, அது கண்ட அவன் அணிகலனை வாங்கியோ விற்ருே அறியாதவதை லின் அரசு விழை திருவின்ை மரபினனுக்கும் இரு நிதிக்கிழவன் மகனுக்கும், த&லக்கோலரிவை கேள்வனுக்கும் புகாரில் மனேவி சிலம்பை விற்பது என்பது இழுக்குடைச் செயலாதலின் மதுரை புகக் கருதிப் பெற்றேர் தந்த நிதிக்குன்றம் இழந்த அதிர்ச்சியில், பெற்ருேர் தந்த மனைவியை இழக்க விரும்பாது மரபுதவிர்ந்து அவளை யும் உடனழைத்துப் போகின்ருன் என்று கோடல் தடையற்றது. இதுகாறும் கூறியவற்றை அறிஞர்கள் ஆழ்ந்து நோக்கி இவ்வாராய்ச்சியில் அறிவுண்டேல் வாயாரப் போற்றுங்கள். வெளிறுண் டேல் கண்ணின் று கண்னறக் கூறுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/320&oldid=743458" இலிருந்து மீள்விக்கப்பட்டது