பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு முறைகளும் சிவஞானபோதமும் திரு. க. வெள்ளைவாரணன் அண்றைமலேப் பல்கலைக்கழகம் தோத்திரமும் சாத்திரமும் இறைவனது திருவருள் வழியடங்கியொழுகும் செம்புலச் செல்வராகிய பெருமக்கள் இறைவனது பொருள் சேர் புகழ்த் திறங்களே உளங்குளிர்ந்து போற்றிய பனுவல்களேத் தோத்திரம் எனவும், அன்னேர் தம் வாழ்க்கையின் வழியாகக் கூர்ந் துணர்ந்த உண்மைகளே ஏனையோரும் பின்பற்றியொழுகு தற்கு ஏற்ப வகுத்துரைத்த மெய்ந்நெறிப் பனுவல்களேச் சாத்திரம் எனவும் வழங்குதல் மரபு. சாத்திரமும் தோத்திரமும் ஆனர் தாமே? என்பது அப்பர் அருள்மொழி. இதல்ை அப்பரடிகள் காலத்திற்கு முன்னரே தமிழ் நாட்டிற் சாத்திர நூல்களும் தோத் திர நூல்களும் நிரம்ப வழங்கின மை புலகுைம். தமிழ் நாட்டில் கடைச் சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் வளம் பெற்று வளர்ந்த சிவநெறியாகிய சைவ சமயம் வேதம், ஆகமம் என்னும் இருதிற நூல்களையும் பொதுவும் சிறப்பு மாகக் கொண்டு விளங்குவதாகும். வேதம் என்பது பாரத நாட்டில் வாழும் மக்கள் பலரும் போற்றும் நிலையில் அமைந்த பொது நூல். சிவாகமம் என்பன பக்குவமுடைய நன்மக்களுக் கென இறைவல்ை அருளிச் செய்யப் பெற்ற சிறப்பு நூல்கள். இவ்விருதிற நூற் பொருள்களேயும் மக்கள் எளிதில் உளங்கொளத் தெளிய வடித்த சாரமெனத் திகழ்வன சைவத் திருமுறைகள். 3 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/321&oldid=743459" இலிருந்து மீள்விக்கப்பட்டது