பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்தை அநுபவிக்காது. அசத்தாகிய உலகம் அறிவில தா தலின் அஃது ஒன்றையும் அறியும் தன்மையதன்று. இந் நிலை யில் சத்து அசத்து என்னும் இரண்டையும் அறியும் தன்மை யுடையது சத்தும் அசத்தும் அல்லாத சதசத் தெனப்படும் ஆன்மாவாகும், என்பதனை உணர்த்துவது 7-ம் சூத்திரம். இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா’ எனவரும் மெய் கண்டார் வாக்கு இரண்டு மிலித் தனியனேற்கே’ எனவரும் திருவாசகத் தொடர்க்கு அமைந்த பொருள் விளக்கமாகத் திகழ்தல் காணலாம். அறுகயிறு சசல் முன் ஜனத் தவத்தின் பயனக இறைவனே குருவாக எழுந் தருளி ஞானத்தி இன யுணர்ந்த உயிர், தன் னே ஐம்பொறிகளுக்கு வேரு கப் பகுத்துணர்ந்த அந் நிலையிலேயே பிறிது காரணம் வேண்டாது தனக்கு ஆதாரமாகிய முதல்வன் திருவடிவினைத் தலைப்படுவதாகும். இக் கருத்தினை வலியுறுத்தும் ஏதுவாக அமைந்தது ஊசல் கயிறற்ருல் தாய் தரையேயாந் துணையான்’ என வரும் சிவஞான போதத் தொடர். இவ்உவமையால் இவ் வான் மாத் தன்னை இந்திரியத்தின் வேறெனக் காணவே தமது முதல்வன் திருவடியை அனேயும் என்னும் மேற்கோளைச் சாதிக்கும் முறையில் இத்தொடர் அமைந்துளது. இங்குக் குறிக்கப்படும் மேற்கோளும் ஏதுவும், திருநேரிசையில், 'பிறை புல் கு ச டையாய் பாதத்து அறு கயிறுாசலானேன்’ என வரும் தொடரை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். சலமிலன் சங்கரன் உயிர்கள் கட்டுற்ற காலத் தில் இறைவன் உயிரோடு அத்து விதமாய்க் கலந்து நின்ற அம்முறை போலவே ஞானம் பெற்ற உயிரும் முதல் வனேடு ஒற்றித் துத் தான் என வேறு காணப் படுமாறின்றி இறைவனது கட்டளையில் அடங்கி நிற்கவே அவ் உயிரைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் இல்லே யாய் ஒழியும் என அறிவுறுத்துவது , பத்தாஞ் சூத்திரமாகும். 32O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/328&oldid=743466" இலிருந்து மீள்விக்கப்பட்டது