பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி மாணவர்க்குப் பாடபுத்தகங்களாக அமைக்கப் பெற்றி ருப்பதும் நாம் காணுகின்ருேம். பாட்டிற்கும் தொகைக்கும் பின் வந்த கீழ்கணக்கிற்கும் முதற் காவியங்களான சிலம்பு மேகலைக்கும் எவ்வளவோ வேறுபாடு களுண்டு. அவற்றை ஒரு சேர இணைத்துப் பேசுவதும் - எழுது வதும் புரிந்து கொள்ள முடியாத தன்மையாக உள் ளது. எவ்வாறு 6 முதல் 10 நூற்ருண்டிற்கு இடையே தோன்றிய சைவசமயக் குரவர்பாடல்களும் ஆழ்வார் பனுவல்களும் பின்னர் 11-ஆம் நூற்ருண்டில் வந்தவர்களால் தொகுக்கப் பெற்றனவோ அதேபோன்று முன் தோன்றிய பாட்டும் தொகையும் அவற்றை அடுத்துத் தோன்றிய கீழ்க் கணக்கும் 6, 7 நூற்ருண்டிற்குப் பின் தொகுக்கப் பெற அது காறும் தோன்றிய ஒரு சில பாடல்கள், நூல்கள் அத்தொகை நூல்களில் இடம் பெற்றிருத்தலும் கூடு மல்லவா? அதல்ைதான் இவற்றின் கால நிர்ணயம் பற்றி இடர்ப் பாடு வருகின்றது போலும்! மாணிக்கவாசகர் காலம் பற்றி ஆய்ந்தவர் பலர். மூவர் முதலிகட்கும் முந்தியவர் அவர் எனக் காட்டும் பேரறிஞர்கள் கா. சுப்பிரமணியபிள்ளை, மறைமலையடிகள், சி. கே. சுப்ரமணிய முதலியார் போன்ற சைவப்பெரும் புலவர்கள். மற்ற பெரும் பாலான ஆசிரியர்கள் மணிவாசகர் மூவர்க்கும் பிற்பட்டவர் என்றும் எட்டு ஒன்பதாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த முதலாம் வரகுணன் அல்லது இரண்டாம் வரகுணன் காலத்தவர் என்றும் கொள்ளுகின்றனர். கம்பர் காலத்தைப் பற்றி தெ. பொ. மீ., சதாசிவப்பண்டாரத் தார், பால் நாடார் போன்ற அறிஞர்கள் 9-ம் நூற்ருண்டு அல்லது 10-ம் நூற்ருண்டு என்ற கொள்கையினராக உள்ளனர். வையா புரிப் பிள்ளை போன்ற சிலர் அவரை 12-ஆம் நூற்றண்டினர் என் கின்றனர். பேராசிரியர் கா. சு. பிள்ளை, விருத்தப் பெருங்காப் பியங்களில் சிந்தாமணி பத்தாம் நூற்றண்டிலும் பெரியபுராணம் பதினேரும் நூற்றண்டின் இறுதியிலும் கந்த புராணம் பன்னி ரெண்டாம் நூற்றண்டின் தொடக்கத்திலும் கம்பராமாயணம் பன்னிரெண்டாம் நூற்றண்டின் பிற்பாதியிலும் இயற்றப்பட்டன 824

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/332&oldid=743471" இலிருந்து மீள்விக்கப்பட்டது