பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையில் வளர்ந்து வருகிறது. R. W. Hallows என்பார் "wireless Imade Simple’ என்னும் நூலொன்றை ஆங்கிலத்தில் எழுதியுள் ளார். ' Radio என்னும் சொல்லுக்குமா ருக “Wireless" என்னும் சொல்லேப்பயன் படுத்துவதற்குக் காரணம் யாதெனின் 'Wireless' என்பது ஒரு தூய ஆங்கிலச் சொல் என்பதே என அவர் தம் நூ லின் முன் னுரையில் குறிப்பிட்டுள்ள ர். ஒரு மொழியினர் பிறமொழிச் சொற்களைப் பெரிய அளவில் கடன் வாங்க முற்பட்டால் அஃது அம்மொழியினரின் முயற்சியின் 6» tn »u , u qub (3& rubuêòu q(3um as T l ' Gub. (Vide Growth and Structure of the English Language p. 133) எனவே முதியவர்கள் தங்களுக்குத் தெரிந்த வடமொழித் தமிழில் அறிவியல் கலேயியல் நூல்களே எழுதி முடித்தால் இளைஞர்கள் முதியவர்களின் அறிவியல் கலேயியல் நூல்களி லுள்ள மொழிக் கலப்பைக் களைந்து மொழித்துாய் மை காத்திட வழிவகை இருக்கவேண்டும். இலக்கண வரம்புகள் தமிழிலுள்ள பல இலக்கண வரம்புகள் காலத்துக் குதவாத வை எனத் தமிழிலக் கணத்தின் ஒரு கூற்றைக் கூட காணுச் சிலர் கூறித்திரிகின்றனர். அன்னரின் கூற்று யானே யைக் கண்ட குருடரின் கூற்று என்றே கூறுவேன். அன் ர்ை 'அரால்டுவீலர்' தொகுத்த குழந்தை களின் அகர முதலியின் முதற்பகுதியில் வருகிற “To break the laws of grammar is to barbarize the language” [Harold wheeler's children’s Dictionary" volume I) என்னும் சொற்ருெடரைப் படித்த பின்ன ராவது திருந்து வார் களா என்பதறியேன். இனி அறிவியல் கலேயியல் நூல்களில் மொழி முதலெழுத்துக் கள், மொழியிறுதியெழுத்துக்கள், மெய்ம்மயக்கம், பிறமொழி யெழுத்துக்கள், பிறமொழிச் சொற்கள் பற்றிய இலக்கண வரம்பு களே க் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/337&oldid=743476" இலிருந்து மீள்விக்கப்பட்டது