பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

This is another reason why the third canto of Silappadigă ram. even though it be conceded to be a genuine part. and not a supplement, of the poem, ought not to be used as a reliable source of ancient South Indian History.” I. நில இயல் பற்றிய அறிவைத் தமிழ்ப் புலவர்கள் பெற்றிருந்த காரணத்தினுலேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தி இன நெறிகளை வகுத்து அவற்றிற்கேற்ற வாழ்க்கை முறைகளேப் பற்றியும் தெளிவாக விளக்கி விட்டுச் சென்றனர். இத்தகைய சிறப்பு பிறமொழிப் புலவர்களுக்கும் - பிறமொழிகளுக்கும் - அன்றும் இல்லை எனக் கூறுவது மிகையன்று. தமிழ்ப் புலவர்கள் வரலாற்றையும் அறிந்தவர்கள் என்பதை முன்னரே கண்டோம். இலக்கியத்திலே வரலாற்றுச் செய்திகளும் பிற கருத்துக் களும் பிஇனத்து - பின்னி - வைக் கப்பட்டுள்ளன . இவ்வாறு பினத் துக் கூறும் முறையையே பண்டைத் தமிழ்ப் புலவர்களும், பிற மொழிப் புலவர்களும் அன்று மேற்கொண்டனர். “Literature and History are twin sisters — inseparable,” stoor ஒரு அறிஞர் (Travelyan) குறிப்பிடுகிறர் இது போன்ற கருத்துக் களின் வன் மையை - ஆற்றலே - P. T. சீனிவாச ஐயங்கார் , K. A. நீலகண் டசாஸ்திரியார் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டனர். ஆகையால் தான் P. T. S. அவர்கள் வஞ்சிக்காண்ட ம் வரலாற்றை அறிந்து கொள்ளப் பயன்படாது என நடு நிலே பிறழ்ந்து குறிப்பிட்டு விட்டார். சிலம்பும் - வரலாறும் நூலிலமைந்துள்ள மூன்று காண்டங்களின் வாயிலாகவு மூன்று இன்றியமையாத உண்மைகள் - செய்திகள் வலியுறுத்தப்பட்டுள்ளன . *_ “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது உம்,' 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/34&oldid=743479" இலிருந்து மீள்விக்கப்பட்டது