பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிலும் பொருள்' என்ற சொல் அமைந்துள்ளது. பரிமேலழகர் பல விடங்களில் முதற்குறட்பாவில் உள்ள சொல்லயே அதிகாரத் தால் வந்தது எனக்கூறி வருவித்துக்கொள் வராதலின் ஈண்டும் அவ்வாறே கொள்வதில் தவறில்லை. ஏனே வை. மு. சடகோப ராமானுசாச்சாரியார் அவ்வாறு கொள்ளவில்லை, எனினும் இதிலி ருந்து ஓர் உண்மை புலகிைறது. ஒரு பொருளைப் பற்றிக் கூறப் படும் பகுதிக்குள் அப்பொருளைப் பற்றிய சொல்லே யாண்டும் வருவித்துக் கொள்ளலாம் என்பதே. * 1-8. பரிமேலழகர் அதிகாரத்தின் அடிப்படையில் சொல்லே வருவிக்கும் போழ்து (அ) "அதிகாரத்தால் பெற்ரும்” (375) (ஆ) அதிகாரத்தால் வருவிக்கப் பட்டது” (478) (இ) , அதிகாரத் தால் வந்தது” :(961) என்று வேறு வேறு வகையாகக் கூறினரே னும் அவற்றுள் வேறு பாடு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 2-1. பரிமேலழகர் அவாய் நிலேயால் வந்தது” எனக் கூறிச் சொற்களை வருவித்துக் கொள்ளுமிடங்களும் பலவுள்ளன. அவாய் நிலை ஆகாங் கூடிா’ என்று வட மொழியில் கூறப்படும். சில சொற் ருெடர்கள் பொருளில் முழுமை பெருது சில சொற்களே எதிர் பார்த்து நிற்கும். ஏற்ற சொற்களே வருவித்து முடிப்பதே முறையு மாகும். பரிமேலழகர் ஒர் சொல் மற்ருெரு சொல்லே அவா வி நிற்பதாக ஓரிடத்தில சுட்டுகிறர். “உடைத்தம் வலியறியார்...” (473) என்ற குறட்கண் உடைய என்பது அவாய் நின்றமை யின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது என்று குறித்தார் . எனவே ஒருசொல் மற்ருெரு சொல்லே அவாவி நிற்பதுண்டு. அதஆன வருவித்துக் கூறுதலே அவாய் நிலைய ல் வந்தது? எனப்படும் என அறிகிருேம். 2-2. மேலே குறிப்பிட்ட ஒரே இடத்தில் மட்டும் இன் ன சொல் அவாவி நின்றது என்பதனைச் சுட்டினர். இருபத் ைதந் திற்கும் மேற்பட்ட விடங்களில் (அ) வல்லது என்பது அவாய் நிலையால் வந்தது (15) (ஆ) உபாயம் என்பது அவாய் நிலேயால் வந்தது (46) என்று மட்டுமே குறித்துச் சென் றிருக்கிருர், இவ் விடங்களில் எச்சொல் அவாவி நிற்கிறது என்பதனை நாமே உய்த்துணர வேண்டியிருக்கிறது...... * : 340

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/348&oldid=743488" இலிருந்து மீள்விக்கப்பட்டது