பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறுகின்றனர். தாயுமான அடிகள் சாகாநிலை வேண்டி நின்ற அருமை இன்னும் பிறப்பதற்கிடம்” என்ற திருப்பாடலில் அமைந்துள்ளது. இறையனர் களவியலுரையிலும் சாகாக்கலே பேசப்படுகின்றது. எ னினும். திருவருட்பிரகாச வள்ளலாருக்கு ஆண்டவன் சாகாக் கல்வியின் தர மெலாம் உணர்த்திச் சாகா வரத்தையும் தந்தான். சாகாக்கலே நிலைதழைத்திடு வெளியெனும் ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி - V1: 1 : 51-52 மரனப் பெரும்பிணி வாராவகை மிகு கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே - VI : 1.327 - 28 என்றெல்லாம் வாய் மணக் கப் பாடுகின்ருர் அப்பெருமான். ஏறக் குறைய நாற்பதினுயிரம் வரிகளே க் கொண்ட திருவருட்பா திரு முறைகளில் சாகா நிலையை விதந்து கூறும் குறிப்புக்கள் ஆயிரத் திற்கு மேலும் உள்ளன. இவற்றைச் சிந்திப்பதற்கு முன் இற்றை நாளேய உயிரியல் விஞ்ஞானம் சாகாக் கலேயைப் பற்றி அறுதியிட்டுரைக் கும் சில உண்மைகளேக் காண் போம். நமது உடம்பு பல வகைப்பட்ட கோடிக் கணக் கான உயிரணுக்களால் (Cells) ஆகியது. ஒவ்வொரு உயிரணு விலும் உள்ள ணு என்ற உயிர்ப் பொருள் உண்டு. இது உயிரணுவில் இருக்கும் உயிர்த்தாது வில் மிதந்து கிடக்கிறது. உள்ளணுவும் உயிர்த்தாதுவும் உயிரணுவின் உயிர்த் தன் மைக்குப் பொறுப் புள்ள வை. இவற்றுள் D. N. A. R. N. A , என்ற இரு மிக நுண் னிய அமிலங்கள் உள்ளன. இ ைவ யிர ண் டு ம் உயிரின் இயல்பு களே எல்லாம் இயக்குகின்றன. இவற்றை உயிர்த் தன் மை யில்லாத (உயிரில்லாத) வேதிப்படிவங்களாக வடித்தெடுக்க முடியும். இப்படி வங்களிலிருந்து புதுவதாக ஒரு உயிரைத் தோற்றுவிப்பதில் இந் நாளே ய உயிரியல் விஞ்ஞானம் வெற்றி கண்டுள்ளது. i தற்பொழுது ரஷ்ய நாட்டு உயிரியல் விஞ்ஞானக்குழுவின் தலைவு ராக இருப்பவர் வெசிலி பியோவிலோ விஷ் குப்ரிவிஷ் என்ற பேராசிரியர். அவர் சாகாக்க லே பற்றி மாஸ்கோ லிட்டாரி 346

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/354&oldid=743495" இலிருந்து மீள்விக்கப்பட்டது