பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பெருஞ்சோதியாகிய ஆண்ட வனே அணைய முடியும். 'கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் கணவர் திருமேனி யிலே கலந்த மணமது தான்' என்ற வண்ணம் அருளுருவத் திருமேனி கற்பூரமணம் பிலிற்றும். இந்தப் பிரணவ தேகம் என் றும் அழிவதில்லே. அருளுருவம் சாகுமா? இத்தேகம் இரண்டரை நாழிகை அளவில், விரும்பியாங்கு, ஆகாயம் போல் கண்ணுக்குப் புலப்படாத ஞானதேகமாக சிவ வடிவமாகிச் சிவத்துடன் கலக்கும். நா ைைன் தானைன் நானுந்தா னும்மான்ை தேைைன் தெள்ளமுதாய்த் தித்தித்து நிற்கின்ருன் வானைன் ஞான மணிமன்றி லாடுகின்ருன் கோனைன் என்னுட் குலாவுகின்ற கோமானே VI; 124 : 1 - என்றெல்லாம் வடலூர்ப் பெருமான் வித்தகம் பேசி இறுமாந் திருப்பது காண்க. மேலும் சுத்ததேகம் பிரணவதேகம், ஞான தேகம் ஆகிய மூன்று தேகங்களேயும் ஆண்டவன் தமக்கருளி ஞன் என்று அடிகள் செம்மாப்பெய்துவதைக் குறித்துள்ளார். சுத்த வடிவுஞ் சுகவடிவாம் ஒங் கார நித்த வடிவு நிறைந்தோங்கு-சித்தெனுமோர் ஞான வடிவுமிங்கே நான் பெற்றே னெங்கெங்கும் தான விளே யாட்டியற்றத் தான். (VI : 109: 17) இவ்வாருக வள்ளற் பெருமான் சாகாக்கலேயைப் பற்றியும், சாகா நிலையைப் பற்றியும், அந் நிலே யைப் பெறுதற்குரிய சாத னம் பற்றியும், அதனே ப் பெறுங் கால் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள் பற்றியும் விவரித்ததோடு அமையாமல், தாம்பெற்ற பேற்றினை இவ்வையக மெல்லாம் பெற வேண்டுமென்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையில்ை, நம்மை எல்லாம் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம், வாரீர் என்று கூவி அழைப்பாராயினர். 3.49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/357&oldid=743498" இலிருந்து மீள்விக்கப்பட்டது