பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலனும் மாதவியும் திரு. கே. இலட்சுமணசாமி அண்ணுமலேப்பல்கலைக்கழகம் 'நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என் ருேர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாடிப்பாடிப் பெருமிதங் கொள்ளும் சிறப்புமிக்க காப்பியம் சிலப்பதிகாரக் காப்பியம். இக்காப்பியத் தலைவி கண்ணகியைப் பற்றியும், கோவலனைப் பற்றியும், நாடக மடந்தை மாதவியைப் பற்றியும் பல ஆராய்ந்து தம் கருத்துக் களே வெளிப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர் சிலர், கோவ லன் கலே பார்வம் உடையவன் என்றும், அவ்வார்வமே காரண மாக, கலேவளம் மிக்க மாதவியை அடைந்து அக் கலைவளம் இல்லாத கண்ணகியை மறந்தான் என்றும் குறிப்பிடுவர். அது பொருந்துமா என ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். கோவலன் கலேயார்வம் உடையவன ? முதலில், கலேயார்வம் காரணமாகக் கோவலன் கலைவளம் மிக்க மாதவியை அடைந்தான் என்னும் கருத்தினைப் பார்ப் போம். மாதவி கலேவளம் மிக்க வள் என்பதனை ஏற்றுக்கொள்ளா தார் இலர் . அவள் ஏழாண்டுகாலம் ஆடலும், பாடலும், பயின் றதும், இசைக் குழாத்துடன் காவலன் மகிழக் கலேவளம் காட்டி யதும், தலைக்கோல் சிறப்பினேப் பெற்றதும், பிறவும் மாதவி உல கோர் புகழும் கலைச் சிறப்புடையவள் என்பதனை க் காண்பிக்கும். காப்பியத்தில் பிற இடங்களிலும் இவ்வுண்மையை வலியுறுத்தும் சான்றுகள் இருக்கின்றன. 350

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/358&oldid=743499" இலிருந்து மீள்விக்கப்பட்டது