பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசுறை கோயில் அணியார் ஞெகிழத்தையும்’ என் கணவன் கைக்கொண்ட சிலம்பினேயும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மை கூறுக’ என வாதிட்டிருக்கலாம். இப்படி யாதொன்றும் விளக்கிக் கூருது, படிப்படியாக எடுத்துரைக்காது, மிகக் குறிப்பாக, சுருக்கமாக நான்கே சீர்களில், எடுத்த எடுப்பிலேயே, எவரும் மறுக்க இயலாதவாறு, மன்னனும் உணர்ந்து தெளியும் வகையில் என் காற்சிலம்பு மணியுடை அரியே’ என்று தேவையான உண்மையை மட்டும் கண்ணகி கூறி வெல்லுகின் ருள். 'தன் சிலம்பின் பரல்கள் மணிகள்' என்ற உண்மை கண்ணகி அறிந்தேயிருப்பாள். ஆனல் கோப்பெருந்தேவி சிலம்பின்: பால் கள் மணிகள் அல்ல என்ருே, அவை முத்துக்கள் என் ருே அவள் எவ்வாறு அறிவாள்? அப்படி அவள் கோப்பெருந்தேவி சிலம்பு அறிந்திருக்க ஒரு சிறு வாய்ப்புக் கூட காவியத்தில் அமைந் திருக்கவில்லே. ஆணுல் கோப்பெருந்தேவியின் சிலம்பு பற்றிய உண்மை ஏதும் தெரியாதிருப்பின், அது முத்து அரியே எனக் கண்ணகி அறியாது இருப்பின், தன் காற் சிலம்பி மணியுடை அரியே என்ற அடிப்படை வேற்றுமையை எடுத்த எடுப்பிலேயே கண்ணகி கூறியிருக்க இயலாது. அப்படியாயின் கண்ணகி அந்த உண்மையை சாங்கு அறிந்தாள்? எப்படி அறிந்தாள்? இந்த ஐயப்பாட்டை விளக்கித் தெளிவான விடை தருவதும் களுத்திறம் உரைத்த காதையே. கனவிலே கட்டுரைத்து வழக்கின் நெளிவு சுழிவுகளே எல் லாம், முடிவினையும் முடிவின் விளேவுகளேயும் கூட முன் கூட்டியே அறிந்தவள் ஆயின மையின் வழக்கை நீள விடாது மன்னன் கனவில் ஒப்புக் கொள்ளக் காரணமாய் அமைந்த அந்த உண்மையை, தன் காற் சிலம்பு மணியுடை அரி என்ற அந்த உண்மை எடுத்த எடுப்பிலேயே கூறி வழக்கில் வென்றுவிடுகிருள் எனக் கருதுதல் பொருந்தும் அல்லவா? இவ்வாறு கனத் திறத்தைக் காவியத் திறமாக்கிக் கொண்ட இளங்கோ அடிகளார் கலேத் திறம் காவியப் புலவர் திறத்தை எல்லாம் விஞ்சி நின்று விளங்குகிறது. 364

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/372&oldid=743515" இலிருந்து மீள்விக்கப்பட்டது