பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவமாலையில், போக்கியர் என்ற புலவர் பொருட் பால் ஏழு பிரிவுடையதென்று, குறிப்பிட்டுள்ளார் (26). இப் பாடலில், ஒழியியல் என்பதைக் குடியியல்’ என அழைப்பதே பொருத்தமாகும். இதில் 'அரண் இரண்டு’ என்று குறிப்பிடப்பட்டது நாடு, அரண் என்ற இரண்டு அதிகாரங்களும் அடங்கியதாகும். கூழ் என்பது பொருள் செயல்வகை என்ற அதிகாரமாகும். எனவே, பெயரில் மாற்றம் உண்டே தவிரப் பொருட்பால் அதிகார வைப்பு முறையில் எவ்வித மாற்றமும் சுட்டப்படவில்லே. பரிதியார் உரை அரசியலே முதலிலே கொண்டு ஏனைய அதிகாரங்களைப் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று திருவள்ளுவர் கூறியுள்ள முறைக்கேற்பக் கொண்டு அமைந்திருந்ததாகவும் பரிமேலழகர் வட நூன் முறையைப் பின்பற்றி இவ் அதிகாரங்க ள னேத்தையும் மாற்றி விட்டார் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆயினும் மணக்குட வர் தொன் மைமிக்க உரையாசிரியராதலின், அவர் கொண்ட முறையையே பின்பற்றி எழுபது பொருட்பால் அதிகாரங்களேயும் வைத்துக் கொண்ட பரிமேலழகர், அவற்றின் இயல்பகுப்பிலேதான் சிற்சில வேறுபாடுகளேப் புகுத்தியுள்ளார் எனலாம். எனவே காலச் சூழலே ஒட்டித் தமது வட நூற் கருத் தைப் புகுத்தப் பரிமேலழகர் முயன் ருராயினும் அதற்கும் ஓர் எல்லே வகுத்துக் கொண்டாரென்றும், தாம் நினைத்தவாறெல்லாம் மாற்றவில்லை என்றும் எண்ணுதற்கு இடமுளது. --- (இ) காமத்துப்பால் - களவியல் 7, கற்பியல் 18. இதிற் கருத்து வேறுபாடு உண்டு. காமத்துப்பால் பற்றிக் கூறவந்த இடத்துத் திருவள்ளுவமாலேயின் படி (27) காமத்துப் பால் (25) அதிகாரங்களில் முதல் ஏழு ஆண்பாற் கூற்ருகவும், அடுத்த பனிரெண்டு பெண்டாற் கூற்ருகவும், இறுதி ஆறு இருபாற் கூற்ருகவும் அமைந்துள்ளமை போதரும். பிறிதொரு திருவள்ளுவமாலே வெண்பாவும், காமத் திறம் மூன்று’ (22) என்றே பேசுகிறது. மணக்குட வரும் பரிப்பெருமாளும் பிறி தொரு வகையான பகுப்பினே மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 366

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/374&oldid=743517" இலிருந்து மீள்விக்கப்பட்டது