பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் குறளை முதலில் கொண்டுள்ளார். இவற்றுள் ஊருணி போல் உதவுதல், பயன்மரம் போல் உதவுதல், மருந்து மரம் போல் உதவுதல் , என வரும் வைப்பு முறையே சிறந்த தென்பது உய்த்துணரத் தக்கதாகும். ". (ஆ) பொருட்பால் - இடுக்கணழியாமை (63) “ இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன் ” (பரி: 8 - மண: 2 - பரிப்பெரு; 2 - பரிதி: 2 - காலிங்கர்: 19) ' இன் பத்துள் இன்பம் விழையா தான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் ” (பரி: 9 - மண: 9 - பரிப்பெரு: 9 - பரிதி: 7 - காலிங்கர: 4) “ இன் னுமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன் ர்ை விழையும் சிறப்பு ' (பரி: 10 - மண: 10-பரிப்பெரு: -பரிதி: 1 - காலிங்கர்: 10) இவற்றுள் இன்பம் விழையாமை; இன் பத்துள் இன்பம் விழையாமை; இன் னுமையையும் இன்பம் என்று கொள்ளுதல் என்ற தொரு படிமுறை மன வளர்ச் சி யைப் பரிமேலழகர் வைப்புமுறை ஒன்றிலேதான் நன்கமையக் காண்கிருேம். பிறரு டை ய வைப்பு முறைகளெல்லாம் இதனை ஒட்டியும் ஒட்டாதும் உள்ளன...... பரிமேலழகர் பால் வைப்பு, இயல் வைப்பு, அதிகார வைப்பு அனைத்திற்கும் காரணம் காட்டி விளக்கியுள்ளார். இவற்றுட் சில காரணங்கள் இயல்பாகப் பொருத்தமுடையனவாய்க் காணப் படும்; மற்றும் சிலவோ காரணம் காட்ட வேண்டும் என்பதற்காகச் செயற்கையாகக் காட்டப்பட்டன போலிருக்கும். ஒரதிகாரத் துப் பத்துக் குறள்களும் வைக் கப்பட்டுள்ள முறைக்கும் அவர் பொருந்திய காரணம் புகல முயல்வர். எடுத்துக் காட்டாக 'இல்வாழ்க்கை’ என்ற அதிகாரத்தைக் காண்போம்: 1, 2 குறள்கள்: “இவை இரண்டு பாட்டானும் இல் நில எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.” 368

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/376&oldid=743519" இலிருந்து மீள்விக்கப்பட்டது