பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதியுடைமை, குடிகளைக்காத்தல், கற்றல், அறிவுடையராதல் ஆள்வினையுடைமை என்ற ஐந்திலும் அமைச்சர் மாட்சிமை யுடையராதல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்தாகும். இதற்குப் பரிமேலழகர் வன் கண், குடி காத்தல், கற்றறிதல், ஆள் வினே என நான் காக்கி உரை கூறி , மேற்கூறிய குறளில் கூறப் பட்ட ஐந்துடன் மாட்சிமைப் படவேண்டும் என் ருர். திருவள்ளுவர் தொகைச் சொல் கொடுத்து முன்னேய குறளு டன் இயைபுபடுத்திப் பாடினர் என்பது யாண் டும் காணப்படாத தாகும். அவ்வக் குறளுக்குள்ளேயே தொகைச் சொல் புணர்த் துக் கூறுதலே அவரது முறையாகும். மேலும் குறள்கள் அனைத் தையும் தனித்தனியே தத் தமக்குள் பொருள் நிறைவுறுமாறு பாடுவதே அவரது தனியாற்றலும் தனிச்சிறப்புமாகும்.... 370

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/378&oldid=743521" இலிருந்து மீள்விக்கப்பட்டது