பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது பண்டைக் காலத்தில் சந்திரனே நிலைக்களகைக் கொண்டு தமிழர்கள் போற்றிப் பின் பற்றிய காலமுறையாகும். இதை வடமொழியாளர் சந்திரமானம்’ என்பர். ஆல்ை, இன்று தமிழ் நாட்டில் தமிழரிடையே நடைமுறையில் இருந்து வருவது ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்ட செளரமானம்’ என்ற கணக்கு முறையாகும். கி. பி. ஏழாம் நூற்றண்டில்-வாாகமிகிரர் தந்த வானவியல் காலக் கணக்கு முறையைப் பின் لم لاh o (وها (ه பற்றி அமைக்கப் பெற்றதே சௌரமான முறை என்ப இங்குக் குறிப்பிடத்தக்கது. இம்மா தங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களா?’ என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை இருந்து வருகிறது. டாக்டர் கால்டுவெல், மிகப் பழங் காலத்திலேயே மாதங் களின் வடமொழிப் பெயர்கள் எளிதில் அடையாளங் காண முடியாதபடி திரிக்கப் பெற்று, தமிழில் வழங்கப் பெற்றிருக்க (36u6ơn Gih T 6ör pl 35(5g5 603 ř. (A Comparative Grammar of Dravidian Languages, 85). ஆல்ை, தமிழ் ஆராய்ச்சியின் முன்ைேடிகளுள் ஒருவரான மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளே அவர்கள் மாதப் பெயர்கள் அனைத் தும் தமிழ்ப் பெயர்களே என்னும் கருத்தை ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மாதங்களின் பெயர் க் காரணம்’ என்ற கட்டுரை யில் தெளிவுபடுத்தியுள்ளார். (நச்சி ர்ைக்கினியன் தை இதழ், உருத்தோற் காரி, திருச்சி :) இவ்விரு வகையான கருத்துக்களேயும் நாம் சீர் தூக்கிப் பார்க்கின்ற பொழுது தை, கார்த்திகை போன்ற சில மாதங் களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருப்பதும் சித்திரை, புரட்டாசி, ஐப்பசி போன்ற மாதங்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களின் திரிபாக விளங்குவதையும் நாம் பார்க்கின் ருேம். இதகுல் அறுவகைப் பருவங்களேக் கொண்ட காலக் கணக்கே மிகவும் தொன் மையானது என்பதும், பன்னிரண்டு திங்களாகப் பகுத்துக் கூறும் வழக்கம் பிற்பட்டது என்பதும் புலனுகின்றன. 379

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/386&oldid=743530" இலிருந்து மீள்விக்கப்பட்டது