பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்ஷேபனை கூறிய சுக்கிரீவனைக் குறிக்கொண்டெழுந்த இராம பிரான் கூற்றே இத்தொடர் என்று, அந்த சுக் கிரீவன் கிட்கிந்தை அரசுப்பேற்றை விரும்பியே சரண்புக் கவனதலால், அங்ாவனம் சரணடைந்த உன் இனப்போலவே அரசை விரும்பிவந்த வகைக் கூறிய இவ் விபீஷணனும் கொள்ளத் தக்க வனென்ற குறிப்பில் பெருமான் அவனை நோக்கிக் கூறியதென்றும் கொள்வதே இங்குப் பொருந்தும். மேலும், மேலர செய்துவான் விரும்பி எய்தினன் (வீட. அடை. ப89) என்ற அநுமன் கூற்றிற்கும், அந்தமில் இன் பத்து அரசே வீடணன் விருப்பம் எனவும் பொருள் கூறுகின்றனர். இக் கூற்றுக்களே முதலில் ஆராய்ந்து நோக்குதல் இன்றியமையாததாகின்றது . வீடணன் அறப்பெருஞ் செல்வன் என்பது இராவண னுக்கு அஞ்சி, அறம் கருமையுருக் கொண்டு வீடணகை வாழ்கின்றது என்று அநுமன் கூற்ருக வைத்துக் கம்பர் கூறியுள்ளமையால் அறியலாம். அறம் அல்லாச் செய்கையால் பெற்ற பெயரே அரக்கன் என்பது என வீடணன் எண்ணுகிருன் . அப்பெயரை மாய்ப்பதற்கு விரும்புகின்ற நிலையில், எல்லேயில் பெருங்குணத் திராமன் பக்க லில் சேர்தலே தகுதி என்று நினைந்து வீடணன், புல்லுதும் புல்லியிப் பிறவிபோக்குதும் முதலியன மொழிகிருன். இப்பிறவியிலேயே தன் பிறவிச் செய்கையை விடுத்து உயர்ந்த வன்’ எனப்பிறர் கூறும் வண்ணம் வாழ்வதே இவனுடைய நோக்கம். வீடணன் இராமனை நோக்கி வந்த மைக்கு இரு காரணங்களே காட்டினன் சொல்லின் செல்வன், (1) பரதனுக்கு நாடு கொடுத்தமை (2) சுச் கீரீவனுக்குப் பட்டம் சூட்டியமை. செறிகழல் அரக் கர்தம் அரசு சீரியோர்... பிறி வருங் கருணையும் மெய்யும் பேணினன்' (வி. அ.90) வாலி விண் பெற அரசிளேய வன் பெற... மேலரசு எய்து வான் விரும்பி மேயின்ை (வீ, அ. 89) அழகுறக் கூறுகின்றன். பரத னுக்கு நாடு கொடுத்தமையும் சுக் கிரீவனுக்கு நாடு கொடுத்தமையும் ஆகிய முன் நிகழ்ச்சிகள் வீடணனிக்கு ஒரு தெளிவை உணடாக்கின. தம்பியர்க்கு அரசு 390

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/397&oldid=743542" இலிருந்து மீள்விக்கப்பட்டது