பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கக்கிளவியால் காலம் உணர்த்துதல் குறிப்புவினை எங்ங்னம் குறிப்பாக காலம் உணர்த்திவரும் என்பதை விளக்கும் சே னு வரையர் வி னக் குறிப்புக் கால மொடு தோன்றுங் கால் பண்டு கரி பன் இ து பொழுது கரி பன் என இறந்த காலமும் நிகழ் காலமும் முறையானே பற்றி வருதலும் நாளேக் கரியன் ஆம் என எதிர்காலத்து ஆக்கமொடு வருதலும் அறிக ’ என்று கூறியுள் ளது சிந்தித்தற்குரியது. . குறிப்பு வினேயுள் சில ஆக்கச் சொல் பெற்று வரும் என்ற நன் னு லார் கூற்றும், எதிர் காலம் குறித் து வருங்கால் குறிப்பு வி&ன ஆக்கச் சொல் பெற்றுவரும் என்ற சேவைரையர் ஆற்றும் குறிப்பிட்ட ஒருவகையில் இயைபு பெற்றுள்ளன . குறிப்புவினே காலம் உணர்த்தி வருவதை விளக்கவே ஆக்கச் சொல் பண்டு பயன் பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதலாம். சே ைவரையர் காட்டு ம் உதாரண ங் களி ல் பண்டு இது பொழுது, நாளே என்ற கால மு னர்த் தும் சொற் கள் தொடரே டு சேர்த்துச் சொல்லப் படுபவை அல்ல; விளங்குதற்காகக் கூறப்பட்டவையே யாகும். எனவே கரியன் என்னும் சொல் ஆயினுன் ஆகின்றன் ஆவான் என்ற முக் கால முணர்த்தும் ஆக்கச் சொல்லால் காலம் உணர்த் திருத்தல் வேண்டும் என்றும், மூன்று காலத்தையும் உணர்த்த ஆக்கச் சொல் சேர்த்துக் கூறும் மரபு மறைந்து, எதிர் காலம் ஒன்றை உணர்த் தும் பொழுதுமட்டும் ஆக்கச்சொல் சேர்த் துக் கூறும் மரபு ஒன்றே சேவைரையர் காலத்தில் நிலே பெற்றிருக்கக் கூடும் என்றும் கருதலாம். இக் கருத்திற்கு "எதிர்கால வி&னக்கு ஆக்கம் சேர்த்துக் கூறல் வேண்டும் என்ருர் சேன வரையர்; முக் காலக் குறிப்பு வினைகளுக்கும் ஆக்கம் சேர்த் தல் பொருத்தமாகும்’ என்ற திரு பூவராகம் பிள்ளேயின் விளக்க மும் அரண் செய்கின்றது. எனவே குறிப்புவினை குறிப்பாகக் காலம் உணர்த்து வதற்குத் துணையாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லே ஆக்கச் சொல் என்றும், ஆக்கச் சொல்லோடு முக்காலமும் உணர்த்தும் நிலை மறைந்து எதிர்காலத்தை மட்டும் ஆக்கச் சொல்லுடன் சேர்த்துக் கூறுதல் நிலைத்திருந்தது என்றும் நாம் கருத முடிகின்றது. - 399

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/406&oldid=743553" இலிருந்து மீள்விக்கப்பட்டது