பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வா க்கும் பிறவழிக் காலப்போக்கும் கொண்டு தொன் னுரல் களுக்கு விளக்கம் செய்து மக்களிடைப் பரப்புகின் ருேம். திறனுய்விலும், மொழியாய்விலும், ஏன் சமயத் துறையிலுங்கூட, அயல் நெறிகளோடு ஒப்புமை காட்டிக் காட்டி உறவு கொள்கின் ருேம். ஆதலின் காலவுரை தவிர்க்க முடியாத பிழை மரபு என் பதனே உணர்ந்து கொள்ள வேண்டும். காலவுரை அவ்வக் கால மக்கட்குக் கவர்ச்சி யுரையாக இருத்தலின், இப்பிழைமரபு முன்னுரல்கள் நிலைப்பதற்கு மறை முகத் துணையாகின்றது . பொருந்தாது போகினும், எவ்வளவுக் கெவ்வளவு காலவுரை கலக்கின்றதோ அவ்வளவுக் கவ்வளவு அவ்வுரைப்பட்ட மூல நூல் நிலைத்துப் பரவும் வாய்ப்புப் பெறுகின்றது. ஆதலின் உரை முறை மூன்றனுள் ஒரு நூலே நிலே பெறுத்தும் ஆற்றல் கால வுரைக்கு உண்டு என்று துணியலாம். - 4 : 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/424&oldid=743573" இலிருந்து மீள்விக்கப்பட்டது