பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அகம் 159). கொடுமுடிக்குப் பின் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தரமூர்த்தி நாயனரை அவிநாசியில் சிவபெருமான் பூதகணங்களே து விக் கொள்ளே அடித்ததோடு ஒப்பிட்டு மகிழலாம். கொங்கு மண்டலத்து உள்நாட்டுப் பிரிவான இருபத்து நாளி து நாடுகளுள் குறுப்பு நாடு ஒன்று. 'கொங்கில் குறும்பில் குர க்குக் களியாய்' என்பது சந்தரர் தேவாரம். குறுப்பு நாடு செரி கரிமலேயின் அடிவாரத்திலிருந்து மேற்கே உள்ள பகுதி யாகும். குறும்பொறை நாடு என முன்னர் வழங்கி வந்த பகுதி சுருங்கி பிற்காலத்தில குறுப்பு:நாடு எனப் பெயர் கொண்டு விட்டது. ஏட்டாம் பத்து 74-ஆம் பாட்டில் ஐந்தாம் வரியில் கொடு மனம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று அரிசில் கிழார் பாடுகிறர். இதற்கு அடுத்த வரியில் குறும்பொறை மலேயைப் பற்றிக் கூறு கிருர், இந்தக் கொடு மனம் என்ற ஊர் சென்னி மலே யை ஒட்டி உள்ளது. தற்போது கொடுமணல் என்று வழங்கப் படுகிறது. குறுப்பு நாட்டு தொகைப் பாடலில் இடம் பெற்று உள்ளது.

வெல்போர் வானவன் குறும்பொ ை க் கோமான் கொடுமுடியுடன் போரிட்டவன் யார்? இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளே அவர்கள் இவனே அடையாளம் காட்டுகிருர், அவன் பல்யானைச் செல்கெழுகுட் டுவன் ஆவான். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் தம்பி. கொங்கு நாட்டில்ஸ்கந்தபுரம் கொங்கூர் (தாராபுரம்) என்ற ஊரிலிருந்து ஆட்சி செய்தவன். வானவன் (வான வரம்பன்) எனப் பெயர் கொண்ட வன். உம்பர்க் காட்டை (ஆனைமலேயை)த் தன் கோல் நி|lஇயவன் . அயிரை மலே (பழனியை அடுத்துள்ள ஐவர்மலே) யின் தலைவன். பூழி நாட்டினே. வென்றவன். பெரும் யானைப் படை கொண்டவன். 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/43&oldid=743579" இலிருந்து மீள்விக்கப்பட்டது