பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவன் எப்படி ஒரு குறுநில மன்னனிடம் தோற்றுப்போய் இருக்க முடியும்? எல்லாப் போரிலும் வெற்றியே கிடைக்கும் என்பது இயலுமா? முதல் போரில் தனது யானைப்படையை அனுப்பி இருக்க லாம். அதில் கொடுமுடி வென்று அப்படையைத் துரத்தியிருக் கலாம். அந்த வெற்றியைப் பாராட்டி கவுதமன் சாதேவனர் பாடியிருக்கலாம். பின்னர் பெரும்படையோடு தானே வந்து கொடுமுடியின் ஆமூர் மதிலே அழித்து வாகை குடியிருக்கலாம். பல்யானே ச் செல்கெழு குட்டுவனைப் பாடும் மூன் ரும் பத்து இவ்வெற்றியைச் சிறப்பித்துப் பாடுகிறது. ஆ கெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானே வெருவரு தோன்றல் (பதிற். 22/15-16) என்று விளிக்கின் ருர். அப்பாடலின் பின் பகுதியில் குதிரை, யாஜன, காலாட் படை வீரர்கள் கோட்டையைத் தகர்த்து வென்றதும், அருகிலிருந்த புனலில் நீராடும் போது எழுந்த பேரொலியை வியந்து கூறுகிருர். ஆமூர் நெய்யல் ஆற்றங் கரையில் இருந்ததை இங்கு நினைவு கொள்ளலாம். திருப்பாண்டிக் கொடுமுடி இந்த ஆமூரிலிருந்து சுமார் 10 கல் தொலைவில் உள்ளது திருப்பாண்டிக் கொடுமுடி என்ற ஊர். இதன் முதற்பெயர் கறையூர். காவேரியின் வலது கரையில் அமைந்துள்ளது. கறையூரிற் பாண்டிக் கொடுமுடி நற்றவா’ என்று தேவாரப் பாடல் கூறும். கோயிற் கல்வெட்டுக்கள் திருப் பாண்டிக் கொடுமுடியார், கொடுமுடி மகாதேவர், திருப்பாண்டிக் கொடுமுடி ஆளுடைய நாயனர்” என்றும் ஆண்டவனே அழைக் கின்றன. புதிதாக ஆற்றங்கரையில் கண்டு பிடிக்கப்பட்ட 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/44&oldid=743590" இலிருந்து மீள்விக்கப்பட்டது