பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர், மோரியர்களுக்கு முந்திய அரச பரம்பரையின ராகிய நந்தர்களைப் பற்றியும் குறிப்பிடுகிருர் (அகம்). எனவே வம்பமோரியர் பிற்காலகுப்தர்களேக் குறிக் காது தமிழகத்தில் புதிதாக வந்த மோரியர் என்றே பொருள்படும் 'வம்பவடுகர் ’ என்ற சங்க வழக்கம் காண்க. எனவே மாமூலஞர் காலம் பிந்து சாரன் காலமாகிய கி. மு. 272க்கு முன்னரும் கி. மு. 300க்குப் பின் னரும் உள்ள காலமாக இருக்கவேண்டும். இந்திய வரலாற்று நூல் ஒவ்வொன்றிலும் அரசாட்சிப் பரம்பரையை நந்தர்களில் தொடங்கி, அடுத்து மோரியர் களேப்பற்றி எழுது வர். இவ்விரு திறத்தாரையும் தெளி வாகக் குறிப்பிடும் மற்ற புலவர்களுடன் மாமூலனர் இவர்களைப் பற்றி மிகத்தெளிவாகக் கூறுகிறர். எனவே இவரது காலம் ஏறத்தாழ கி. மு. 300 எனக் கொள்ளுதல் தவறின் று. எனவே, சங்க காலம் கி. மு. 30-க்கும் முந்திய தொன் மை உடையது. இக் காலத்தே இவ்வளவு தெளிந்த கருத்துள்ள பாடல்களேத் தருமளவு மொழிவளம் பெற இதற்கு முன் எத் துணையோ நூற்ருண்டுகள் தமிழ்மொழி நடைமுறையில் வளர்ச்சி பெற்று வந்திருக்க வேண்டும். 4.38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/445&oldid=743596" இலிருந்து மீள்விக்கப்பட்டது