பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையில் வேறு சந்தங்களுக்குப் பின்னர் இச் சந்தம் வருகின்ற பொழுது படிப்பார்க் குச் சோர்வு ஏற்படுவதில்லை. இம்முறையிலே தான் 58 தாழிசைகளிலும் 132 இடங்ளில் சந்த மாற்றம் செய் கின் ருர் ஆசிரியர். இது இந் நூலின் சிறப்பிற்குக் காரணமாகும். இனி, ஆசிரியர் இச்சந்தங்களே உண்டா க்குகின்ற முறை களிற் சிலவற்றைக் காணலாம். ஒரு சீரையே திரும்பத் திரும்பச் சொல்லி ஓசை கொடுக்கின்ருர் ஆசிரியர். ‘' அவசமுற் றுளநெகத் துயினெ கப் பவளவாய் அணி சிவப் பறவிழிக் கடைசிவப் புற நிறைக் கவசமற் றி ளந கைக் களி வரக் களிவரும் கண வரைந் புணருவிர் கடைதிறந் திடுமினே ’’ (கடைதிறப்பு-13) இத்தாழிசையில் கருவிள’ (அவசமுற்) என்ற வாய்ப்பாட்டுச் சீரினேயே எட்டு முறை பயன்படுத்தி ஆசிரியர் ஒசை கொடுக் கின் ருர். சில இடங்களில் இரண்டு சீர்களில் ஏற்படும் ஓசையினைத் திரும்பத் திரும்பக் கூறுகின்றர்.

  • மு னிபவ ரொத் திலராய் முறுவல் விளேத்தலுமே

முகிழ்நகை பெற்றமென மகிழ்நர் மணித்துவர்வாய் கணிபவ ளத் தருகே வருதலு முத்து திருங் , கயல் களி ரண்டு டையீர் கடைதிற மின்றிறமின் ” (கடை திறப்பு-7) இத்தாழிசையில் “விள., (கூ) வி. கா’ (முனிபவ ரொத்திலராய்) என்ற வாய்பாட்டுச் சீரினேயே 4 முறைகள் திரும்பத் திரும்பக் கையாண்டு சந்த முண்டாக்குகின் ருர். இனி ஒர் அடியின் முற்பாதியில் உள்ள ஓசையே திரும்பவும் அடுத்த பாதியில் வருமாறு ஒசை உண்டாக்குவது மற்ருெரு முறை.

  • முருகிற் சிவந்த கழுநீரும்

முதிரா இளைஞ ராருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர் செம்பொற் கபாட ந் திறமினே’’ (க டைதிறப்பு-10) 448

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/455&oldid=743607" இலிருந்து மீள்விக்கப்பட்டது