பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறக்குறைய முன்னுாறு ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தவர், முத்துத் தாண்டவர். மணிவாசகரது காலம் இன்று வரையறை பெற்ற அளவில் 8-ம் நூற்ருண்டாகும். இடையே பல ஆண்டுகள் கழிந்திருந்தும், மணிவாசகர் பெற்ற பெரும் பேற் றி&ன அம்பலவாணன் அருளால் முத்துத் தாண்ட வர் உணர்ந்து தமக்கு உணர்த்துகிருர், மணிவாசகரது அடைவை நமக்குத் தெளிவாக உணர்த்துப வர்கள், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும், இராமலிங்க அடிகளும் ஆவார்கள். முத்துத் தாண்டவர் கீர்த்தனையும் நம் மைச் சிந்திக்க வைப்பதாகும். உடலோடு மறைகின்ற பெரும் பேறுபெற்றேர் ஒருசிலரே ஆவர். மணிவாசகரது அடை வைப் பேறு என்று குறித்தலே பொருந்தும். பொருந்து மாற்றை நாம் விரிவாக ஆராயாமல் இங்கு சில விளக்கங்களைத் தர இயல்கின்றது. மணிவாசகரது பேற்றினை நாம் ஊன்றி அறிய இக் கட்டு ை துணை செய்யும் என்று கருது கிறேன். 454

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/461&oldid=743614" இலிருந்து மீள்விக்கப்பட்டது