பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் நாடகங்களின் முதற்காட்சிக் குறிப்பு டாக்டர் தா. வே. வீராசாமி கேரளப் பல்கலைக்கழகம் 0.1. இந்திய நாடகங்களின் பழைய மரபு பாணர் கூத்தர். ஆகிய நாடு பெயர் மக்களிடமிருந்து தோன்றியது (1) எனவும், தென் னிந்தியாவின் குறிப்பிடத்தக்க நாடக மரபுகளை வேறெங் கும் காணற்கியலாது (2) எனவும் ஆய்வாளர் கூறுவர். சங்க காலத்தில் காணும் பெரும்பாணர் சிறுபாணர் தொகை கொண்டு இம்மரபின் வித்தாகத் தமிழ் நாடகம் இருந்தது எனலாம். நாட கச் செய்திகளே அடியார்க்கு நல்லார் போன்ருேளின் உரைவாயி லாக ஒரளவே அறிய முடிகிறது. 0.2.1. தற்காலத் தமிழ் வரலாற்றை ஒட்டி நாடகமும் பல முனைவளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டுப்பற்று, தன் மானம், தனித் தமிழ், இனப்பகுப்பு போன்ற பல கொள்கைகள் தலையெடுத்த, கால வெள்ளத்தில் மலர்ந்த மலராக (4) ப்பாரதிதாசன் விளங்கு கிறார். 0.2.2. இளமையிலேயே கவிஞர் பள்ளி நாடகங்களில் முக் கிய நடிகராக இருந்தார் (5) நாடகத்தில் வசங்கெட்ட மனிதன்” பாடக் கூடாதென நாடக விமர்சனம் செய்த (6) பாரதியின் கவிதா மண்டலத்தில் வளர்ந்தார். அரசினரால் தடை செய்யப் பெற்ற இவருடைய இரணியன்’, நாடகங்களே எழுதிக் குவிக் கும் இளைஞர்களே உண்டாக்கியது. (7) எனவேதான் நடிகராயி ருந்து நாடக மேடை நுணுக்கங்களைச் சேக்ஸ்பியர் போல் 455

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/462&oldid=743615" இலிருந்து மீள்விக்கப்பட்டது