பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றலுக் காற்றது புறங் காட்டி ஒடியதைக் கண்டு நின்றன் பாரி எனும் செய்தி, ஒடுகழற் கம்பலே கண்ட, செருவெஞ் சேய்' எனப் பாடப்படுதலின் பகைவர் தம் வீரம் வெளிப் படுத்தப்பாரி மீது பகை கொண்டனர் என எண்ண இயலவில்லை. - ".

    • " .

மன்னர் சிலர் பாரியின் மகளிரை மணம் பேசி வந்தனர். பாரி தன் மகளிரை அவர்க்குத் தர மறுத் தான். உறவு வேண்டி வந்தவர் பகைவராக மாறியதற்கும் மூவர் ஒன்று சேர்ந்து வந்து அவன் மீது போர் தொடுத்தமைக்கும் அதுவே காரணம் என அறிஞர் சிலர் கருதினர், எழுதினர், புற நானூற்றுப் பாடல் களுக்குத் துறை வகுத்தவரும் இக் கருத்துக் கொண்டே பாரி பற்றிய 109, 10, 11 ஆம் புறப்பாடல்களுக்கு மகண் மறுத்தல் என்ற துறையமைத்துள்ளார். பாரிமகளிரை மணம்பேசி வ்ந்தமை பற்றியோ மகண் மறுத்தல் பற்றியோ இப்பாடல்களில் கூறப்படா மையால் மக ண் மறுத்தலேப் பகைமைக்குக் காரணமாகக் கொள்ளல் பொருந்தாது. பின் எதுதான் கா ரணமாகும்? பாரி தன் நிலப்பரப்பால் சிறியவனுயினும் நெஞ்சாற் பெரியவகை இருந்தான், தன் பாற்பரிசில் வேண்டி வருவோர் மடவர் மெல்லிய ராயினும் அவர்க்கும் வாரி வழிங்கினன்; ப&ன கெழு வேந்தரை இறந்தும் இரவலர்க் கீந்தான் ; மாரிபோல வாரி வழங்கி உலகு புரந் தான் ; நாத் தழும் பிருப்பப்பாடா தாயினும்”, “பூ க்தலே யரு அப் புனே கொடி முல்லே'க்குக் கறங்கு மணி நெடுந்தோர் கொள் கெனக் கொடுத்தான்; தன் நாட்டு முந் நூறு ரையும் பரிசிலர்க்கீந்தான் ; இவற்றினும் மேலாகத் தன் ஆன வேண்டினும் தரும் எண்ணமுடையவனுக இருந்தான். கொடை யால் பாரியின் நிலம் சுருங்கிற்று, ஆனுல் அவன் புகழோ நிலத் தினும் பெரிதாய் வானினும் உயர்ந்ததாய்க் கடலினும் ஆழ்ந்த தாய்ப் பெருகி வளர்ந்து கொண்டே இருந்தது. இவன் புகழ் பாடினர் புலவர்; அது பொருது ஒரு சிலர் புழுங்கி இருக்க வேண்டும். அப் புழுக்கமே பகையாக-போராக நீண்டிருக்க வேண்டும். புகழ்பட வாழாதார் புகழாளனே எதிர்த்து அவன் புகழ் கெட முயன்றனர்; போர் தொடுத்தனர்; தோற்ருேடினர் (புறம். 120). தோற்ற வர், வெல்வது கருதி வேண்டுவன செய்து பறம்பு மீது மீண்டும் படையெடுத் தனர். அவர் மரந்தொறும் பிணித்த களிற்றின ராயினர்; புலந் 469

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/476&oldid=743630" இலிருந்து மீள்விக்கப்பட்டது