பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலுணர்ச்சியும் தொல்காப்பியரும் ஈ. கோ. பாஸ்கரதாஸ் பூ. சா. கோ. கலேக்கல்லூரி, கோவை பசி உணர்ச்சியும் பாலுணர்ச்சியும் ஆகிய இாண்டு உணர்ச் சிகள், மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அவனே ஆட்கொள் வனவாம். பசி உணர்ச்சி தணிய முயலும் வாழ்க்கையைப் புற வாழ்க்கை எனலாம். பாலுணர்ச்சி தணிய முயலும் வாழ்கையை அகவாழ்க்கை எனலாம். பசி உணர்ச்சி இன்றேல் தனி உடம் பின் வளர்ச்சி இல்லே. பாலுணர்ச்சி இன்றேல் மனித இனத்தின் வளர்ச்சி இல்லை. ஆகவே இவ்விரு உணர்ச்சிகளும் இயல்பான வை; தவிர்க்க முடியாதவை; தவிர்க்கக் கூடாதவை. இவ்விரு உணர்ச்சிகள் நிறைவேறும் போது தான் நிறைவுடைய இன்பம் தோன்றுகிறது. அவ்வின்பம் எல்லா உயிர்கட்கும் பொதுவானது. இதனையே தொல்காப்பியர் "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்ருகும்’- பொருளியல்-27. என ருா. = மனித இன வளர்ச்சிக்கு மட்டும் பாலுணர்ச்சி என்பதில் சிறப்பேதும் இல்லை. காதல் உணர்வை வெளியிடுவதற்குப் பாலு னர்ச்சி துணைபுரிகிறது என்பதே அவ்வுணர்ச்சியின் சிறப்பாகும். காதல் உணர்ச்சியின்றி மன நிறைவு தரும் பாலுணர்ச்சி இல்லே; பாலுணர்ச்சி இன்றி உண்மை காதலுணர்ச்சி இல்லே ' . ஆதலின் 1. “without love there can be no really satisfying sex; without sex no real love”. “Quetions everyone asks about sex” i. Essay by David Reubeu - Reader's Digest April 71. 476

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/483&oldid=743638" இலிருந்து மீள்விக்கப்பட்டது