பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்த காதலுணர்ச்சி, உடல் வளத்திற்கு மட்டுமின்றி மன வளத்திற்கும் இன்றியமை யாததாகும். அத்தகைய மன வளத்தை எதிரொலிப்பதுவே அகப் பொருள் துறையாகும். இம் மன வளமே மற்ற உயிர்கட்கும் மனித உயிர் க்கும் வேற்றுமையைப் புலப்படுத்துவது. " ஆறறிவதுவே அவற்றேடு மனனே.” -மரபியல் 27 என் ருர் கொல்காப்பியரும். ஈ னடு ஆறும் அறிவு எனினும் отц) о то, о вои நெறிமுறையை அறியும் அறிவு எனினும் பொருட் பொருத்தம் சிறக்கிறது. இவ்வறிவு ஆண் பெண் இரு பாலர் க்கும் பொது என்பது வெளிப்படை. இவ்வறிவை - மனத் தால் அமைந்த அறிவை அகப்பொருள் தலைவனும் தலேவியும் பெற்றவர் ளாவர். இவ்வறிவு பாலியல் அறிவு என ஈண்டுக் கொள்ளலாம் பாலியல் அறிவு இயல் பானது என்பதை முன்னரே கண் டோம். பாலுணர்ச் சி என்ற நோக்கில் இதுவரை நாம் இலக்கியத் தைக் காணவில்லே. இலக்கியத்தில் காணும் தலைவனும் தலைவி யும் பாலுணர்ச்சியால் ஆட்கொள்ளப் படுவார்கள் என்ற மிக எளிய உண்மையையும் நாம் இதுவரை சுட்டிக் காட்டவில்லே. இதற்குக் காரணம் பாலுணர்ச்சி என்ற சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல்லான "செக்ஸ்’ (Sex) என்பதனைச் சரியான பின்னணியில் எண் ணுவதற்குப் பதிலாக, இழிந்த பின்னணி யிலேயே நாம் எண்ணி வந்ததாகும் செக்ஸ் என்பது உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு என்ற எண்ணமே நம்மில் பலருக்கு இல்லை; இது உடலுணர்வு மட்டுமன்றி மன உயர்வும் கூடியதே ஆகும். இப்பின்னணியிலேயே நாம் பாலுணர்ச்சிகளேயும் நோக்குதல் வேண்டும். lo பாலுணர்ச்சிகள் நல்ல நோக்கிலும் தீய நோக்கிலும் அமை தல் உண்டு; ஒன்றிய பாலுணர்ச்சி - ஆண் பெண் மனம் ஒன்றிய பாலுணர்ச்சி நல்ல நோக்கில் அமைவது. இதன் விளேவே அன் பொடு புணர்ந்த ஐந் தினே வழி நிகழும் காமக் கூட்டா கும். ஒன்ருத பாலுணர்ச்சி - ஆண் பெண் மனம் ஒன்ருத பாலுணர்ச்சி தீய நோக்கில் அமைவது. இதன் விளைவ்ே சமூகச் 477

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/484&oldid=743639" இலிருந்து மீள்விக்கப்பட்டது