பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியாகப் பிறக்கும் ஆகுபெயருக்கு உதாரணத் தைத் தேவாரத் தில் காண்கின் ருேம். தொண்டெலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே. (188-8) தொண்டெலாம் மலர் துாவியே த்த (164.1) ஆரும் வேற்றுமைக்கு 'அது' என்பதை மட்டுமே உருபாகத் தொல் காப்பியர் கூறுகின் ருர். நன் னுாலாரே ஒருமைக்கு அதுவும் பன் மைக்கு அவ்வும் உருபாம் என் கின் ருர். பன் மைக்கு அகரம் பயின்று வந்துள்ளது சம்பந்தர் பாக் களில்: ஞான சம்பந்தன சொல் (58.11) தம தொல்வினே (213.5) இறைவன சிரபுரம் (125-10) தன் ன உரு (329,-4) தமிழ் வளர்த்த சான்றேர்களில் தலைசிறந்து நிற்பவர் ஞான சம்பந்தர். தமிழ்ஞான சம்பந்தன் என்று அவரைத் தன் இனக் குறிப்பிட்டுக் கொள்கிருர். அவரிடம் சொற்கள் ஏவல் கேட்டு நின்றன எனலாம். தமிழ்ச் சமயங்கட்குப் புத்துயிர் நல்க, மொழியைக் கருவியாக் கையாண்ட அந்த வித் தகர், மொழிக்கும் ஒரு புதிய வடிவும் மெருகும் கூட்டிர்ை. முத்தமிழுக்கும் நிலைக் களமாக உள்ள அவரது தெய்வீகப் பாக்க ளில் நூற்றுக் கனக் கான யாப்பமைதிக ளேயும் சந்த வி கற்பங்களே யும் மட்டுமின் றித் தமிழ் மொழியின் செழும் வளத்தினையும் நறுஞ்சுவையினையும் இனிது நுகர முடிகின்றது. மொழியின் கட்டுக் கடங்கா வளர்ச் சிக் கூறுபாடுகள் அனைத்திற்கும் எண்னற்ற எடுத்துக் காட்டுக் க&ள அவர் பாக் களில் பரக்கக் கா ன லாம் . போல’ என்னும் பொருள்படும் உவம உருபிற்கே அ. அடு, அடுத்த, அடைந்த, அணித்தா, அனேயும், அனே, அது, அமர், அமரும், அன்ன, ஆர், ஆர்ந்த, ஆரும், ஆல், ஆன் இட்ட இயல், இயலும், இலங்கு, இன் , இந் நிகர், இன் னே ர், உவா, உற, உறு, எதிர், என்ன , என , ஏய் க்கும், ஒத் து, ஒத் தொளிர், கெழு, கொண்ட செய், செய்த, சேர், தகு, தரு, தாங்கு, தாழ், திகழ், நிகர், நிலாவிய, நேர், படும், புரை, புல் கு, பொரு, போல், போல, மல்கு, மலி, மேவு, வண்ணம், வரும், வளர் என எண்ணற்ற சொற்களே ஆண்டுள்ளார். அவரது சொல் வளமும் ஆளு மையும் 486

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/493&oldid=743649" இலிருந்து மீள்விக்கப்பட்டது