பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவுள அங்கி அகத்திய ! திரு. வை. இரத்தினசபாபதி அண்ணுமலேப் பல்கலைக்கழகம் சிவமோங்குந் தனிப்பெருநெறியை வகுத்துக்காட்டும் சாத் திர நூலெனக் கொள்ளப்பெறும் திருமங்திரத்தில் இரண்டாந் தந்திரத்தை, அகத்தியம் என்று தலைப்பிட்ட இரண்டு செய்யுட் களால் தொடங்குகின்றர் திருமூலர். அவற்றுள் முதற் செய்யுளின் மூன் ரும் வரியாக அமைந்ததே இத்தலேப்பு. செய்யுட்கள் இரண்டும் கீழே கொடுக்கப் பெற்றுள்ளன. நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெருமா னென்ன ஈசன் நடுவுள. அங்கி அகத்திய! நீ போய் முடுகிய வையத்து முன் னிரென் ருனே. (334) அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவைெடும் அங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. (323) கீழே குறிப்பிடப்பெற்றுள்ள மூன்று செய்திகளே உள்ளத்தில் அமைத்துக் கொண்டு இத்தலைப்பைப் பற்றிய ஆய்வில் நுழைதல் வேண்டும். 1. சமயவாதிகள் கூறும் சில பழங் கதைகளுக்குத் தத்துவ அடிப்படையில் உண்மைப்பொருள் காணவேண்டும் என்பதே திருமூலரின் தனி நெஞ்சம். - 495

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/502&oldid=743660" இலிருந்து மீள்விக்கப்பட்டது