பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலத் துவாரத்து மூளும் ஒருவனே மேலேத் துவாரத்து மேலுற நோக்கிமுற் காலுற்றுக் காலனக் காய்ந்து அங்கியோகமாய் ஞானக் கடவூர் நலமாய் இருந்ததே, என்ற இச் செய்யுளில் காலனே க் காய்ந்தமைக்குரிய கருவியாக அங்கியோகத்தை மேற்கொண்ட சிவன் காமனேக் காய்வதற்கும் அத்தகைய ஒரு யோகத்தை மேற்கொண்டான். அவ்யோகத்தை அருந்தவயோ கம் என்று குறிப்பிட்டாலும், அதுவும் இவ்வாறே அமைந்த அங்கியோகம் என்பதை உணரலாம். இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயலழித் தங்கண் அருந்தவ யோகம் கொறுக் கை அமர்ந்ததே. என்ற செய்யுளின் மூலம் அங்கியோகத்தின் விளக்கத்தையும் காணலாம். புறத்தே தீவளர்த்து, வேள்வி செய்து அதன் மூலமாகச் சில சக்திகளைப் பெறுவது பெரும்பாலும் இக் காலத்தே பூர்வ மீமாம்சகர் கூறும் நெறியை ஒத்தது. முத் தீக் கொளுவி முழங் கெரி வேள்வி செய்து அவியிட்டு அதன் மூலம் வந்த யானே யை ஏவினர் தாரு கவனத்து முனிகள். தக்கனும் அத்தகையதொரு புறத் தீயால் அமைந்த வேள்வி செய்தான். சிவன் அவைகளே அழித்தான். பல்வேறு வகைப்பட்ட சக்திகளைக் கருதித் தேவர் கள் தீ யை வளர்க்க அதனுள் வளர்ந்தது கொலேத் தொழிலே யன்றி வேறன்று என்பதைத் திருமூலர் சுட்டிக் காட்டினர். இப்புறத்தி வேள்விக்கு மாருக அகத் தீ வளர்த்துச் செய்யப் பெறும் யோக நெறிக்கு அங்கி யோகம்’ என்பது பெயர். அருந்தவ யோகம் என்றும் சுட்டப் பெறுகிறது. இது அட்டாங்க யோகத்தினும் வேறுபட்டது. அட்டாங்க யோகத்தை த் திருமூலர் மூன்ருந் தந்திரத்திற் பேசுகிருர். புறத் தீயை வளர்த் துப் பெறுவனவாக உள்ள சக்திகள் ஆணவத்தை உண்டாக்கு வன. புறத்தி வேள்வியாற் பெருகும் சக்திகளையும் அழிக்கும் பேராற்றல் உடையனவே அகத் தீ வளர்ப்பு யோகத்தாற் பெறும் 497

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/504&oldid=743662" இலிருந்து மீள்விக்கப்பட்டது