பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடா பழங்குடிகளும் சுமேரிய உறவும்


திரு. சு. சக்திவேல்
கல்கத்தா & அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

தோடா பழங்குடி மக்கள் பல நூற்றாண்டு காலமாக நீலகிரியில் வாழ்ந்து வருகின்றனர். தோடா பழங்குடிகளுடன் கோத்தர், இருளர், பணியர், குறும்பர், காட்டுநாயக்கர், கசவர் போன்ற பழங்குடி மக்களும் நீலகிரியில் வாழ்ந்து வருகிறர்கள். அனைத்துப் பழங்குடி மக்களும் ஒரே மாவட்டத்தில் வாழ்ந்தாலும் பண்பாடு, பழக்கவழக்கங்கள், தொழில், மொழி ஆகியவற்றால் வேறுபட்டவர்களாவர். தோடர்களது வாழ்க்கை முழுதும் எருமையைச் சுற்றியே சுழல்கிறது. கோத்தரது வாழ்வு பல கருவிகளை உற்பத்தி செய்வதிலும் படகரது வாழ்வு விவசாயத்திலும் மற்ற பழங்குடி மக்களது வாழ்க்கை காட்டுப் பொருட்களைச் சேகரிப்பதிலும் தேன் எடுத்தல் போன்றவற்றிலும் கழிகின்றது. தோடர்கள் தனித்து வாழ்ந்த வாழ்க்கையின் பலனாக, அவர்களிடையே சில சிறப்புத் தன்மைகளைக் காண்கிறோம்.

தோடர்களது பூர்வீகம் (Origin) பற்றி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. தோடர்களைப் பற்றி நன்கு ஆய்ந்த ரிவர்ஸ் (1906) அவர்கள் தோடர்கள் மலபாரினின்றும் வந்தவர்களாகயிருக்க வேண்டும் என்கிறார். மலபார் மக்கட்கும் தோடர்கட்கும் பொதுவாகவுள்ள பல்கணவமனம் (Polyandary), காமக்கிழத்தியர் உறவு, மாப்பிள்ளை மணப்பெண்ணுக்குத் துணி கொடுத்தல், உறவினர்கள் பிணத்திற்குத் துணி போத்துதல், தொட்ரி’, ‘மித்குவாடர்', போன்றவற்றைப் பயன்படுத்துதல்

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/52&oldid=1391706" இலிருந்து மீள்விக்கப்பட்டது