பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராணத்தில் குடும்ப நிலை திரு. ரா. சுப்பிரமணியன் போப் கல்லூரி, சாயர்புரம் ஆதியில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள் பின்பு படிப்படியாக நாகரிக முற்று, கூட்டம் கூட்டமாக வாழத் தலப்பட்டனர். இதன் விளைவாக விளைந்ததே குடும்பமாகும். பல குடும்பங்கள் இணைந்ததே சமுதாயம் எனப்படும். மக் கட் சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளில் கலே யாயதும் இன்றியமையாததும் குடும்பமே ஆகும். இக் கட்டுரையிலே சேக்கிழார் பெருமான் காட்டும் குடும்ப நிலை யினையும், அது சங்க காலத்திலிருந்து எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதனையும் ஒரளவு காண்போம். குடும்பம் இல்லையேல் சமுதாயம் இல்லே. பல சிறு குடும் பங்கள் இணைந்தே சமுதாயம் உருவாகின்றது. ஒரு குடும்பம் என்பது என்ன என்பதை முதற் கண் நோக்குதல் வேண்டும். தலைவனும், தலைவியும் இணைந்து இல்லறம் நடத்துவது குடும்பம் ஆகும். இருவரும் ஒத்த நிலையில் வாழ்வினை நடாத்தி, நன் மக்கட் பேற்றினேப் பெற்று விருந்தோம்பல் முதலான நல்லறங் கள் பல புரிந்து, இறுதியில் இறைவன் திருவடி நீழலே அடை வதே குடும்பத்தின் இன்றியமையாச் செயலாகும். இத்தகைய சீரிய குடும்பங்களேயே சேக்கிழார் காட்டுகின் ருர், தலைவன், தலேவி நிலை இங்குத் தலைவன், தலைவி என்றவுடன் பெரிய புராணக் காப்பியத் தலைவனையோ, தலைவியையோ குறிக்கவில்லை. 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/63&oldid=743681" இலிருந்து மீள்விக்கப்பட்டது