பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்காலச் சமுதாய பழக்கமாக இருந்தது. இவ்வாறு அக் காலத் தில் விருந்தோமல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவுறவு அறனெனப்பட்டதே இல் வாழ்க்கை என்னும் தமிழ் மறையின் படி அக்கால மக்கள் வாழ்ந்தனர். இடைக்காலத்தில் வாழ்ந்த மக்களுள் சமணர்கள் தவிர ஏனையோர் அனைவரும் இந்நெறி யிஜனயே கைக் கொண்டனர். “அடியவர்களில் இல்வாழ்க்கை யில் ஈடுபட்டிருந்தவர் ஒன்பதின்மராவர்.’’ திருமணங்கள் பெரும்பாலும் ஒரே சாதியில், அதாவது ஒரே இனத்தில் தான் அக் காலேயில் நடைபெற்றது. சம்பந்தர், தம் குலமான மறையவர் குலத்திலிருந்தே பெண் எடுத்து மணந்து கொண்டார். வணிகர் குலத்தில் பிறந்த காரைக் கால் அம்மையாருக்கு, அதே குலத்தில் பிறந்த பரமதத்தனுக்கு மனம் செய்து கொடுத்தனர். இவ்வாறு திருமணங்கள் ஒரே இனத்தில் நடை பெறினும், சில திருமணங்கள் வேறு இனத்திலும் நடை பெற்றன. வேதியர் குலத்தில் பிறந்த சுந்தரம், பதியிலார் குலத்தில் பிறந்த பரவை யாரையும், வேளாளர் மரபில் தோன்றிய சங்கிலியாரையும் மணந்து கொண்டார். மயிலாப்பூர் வணிகராகிய சிவநேசச் செட்டிய ர் தமது மகளாகிய பூம்பாவையாரை மணந்து கொள்ளும்படி மறையோராகிய சம்பந்தரை வேண்டுகிறர். மணமுறை : அக்காலச் சமுதாயத்தில், மணமக்களேத் தேர்ந்தெடுக்குங் கால் குணம் பேசிக் குலம் பேசியே தேர்ந்தெடுத்தனர். பன்னி ரெண்டு வயதே பெண்களுக்குரிய மண வயதாக இருந்தது. களவு மணம் சங்க இலக்கியத்தில் மிகுதியாக நடைபெற்றது என்பது சான்றேர் முடிவு. ஆயினும் ஒரிரு திருமணங்கள் பெரியோர்களால் உறுதி செய்யப்பட்டன என்பதை நாம் குறுந் தொகை 146-ம் பாடலில் அறியலாம். 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/68&oldid=743686" இலிருந்து மீள்விக்கப்பட்டது