பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகவன் மகள் டாக்டர் மோ. இசரயேல் மதுரைப் பல் கலேக் கழகம் இலக்கியம் மக்கள் வாழ்க் கையைப் படம் பிடித்துக் காட்டு கின்றது. பண்டை இலக்கியங்களில் அக் கால மக்களின் வாழ்க்கை முறை, பழக் கவழக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியன பொதிந்து கிடக் கின்றன. அவை யெல்லாம் எல்லோர் க்கும் தெற்றெனப் புலப்படுதல் இல்லே. எனவே இன்றும் அறிஞர்கள் பண்டைக்கால இலக்கியங்களே ஆய்ந்து செய்திகளே அறிந்து கொண்ட வண்ணமே இருக்கின்றனர். ஆய்ந்து கண்ட செய்தி கள் பலருக்கும் அறிவூட்டி, மகிழ்ச்சியடையச் செய்கின்றன. சங்க இலக்கியத்திற் காணும் சில மாந்தர் பற்றிய செய்திகள் அப்படியே இன்று காணக் கிடைக்காவிடினும், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறிது வேறுபட்ட நிலையிலாயினும் நாட்டுப் புறங்களில் நிகழ்வதனேக் காணலாம். பண்டைப் பெயர்கள் மறைந்து போயினும் வேறுபட்ட பெயர் கள ல் இன்றும் அவை வழக்கில் அமைகின்றன. பண்டைக் காலப் பழக்கவழக்கங்களுள்ளும் பல இக் காலத்திலும் வாழ்வில் நிகழ்வதனே க் காணலாம். சங்க இலக்கியத்தில் குறுந்தொகை என்னும் நூலின் கண், 'அகவன் மகள்’ என்ற சொற்ருெடர் இருபாடல்களில் காணப் படுகின்றது (23, 298). பிற்கால இலக்கியங்களிலும் இக் கால வழக்கிலும் இச் சொற்ருெடர் இடம்பெறவில்லை. எனினும் அகவன் மகள் தொன்றுதொட்டு இன்றுவரை தமிழ்க் குடி மகளாகத் தமிழர் வாழ்வோடு, பண்பாட்டோடு உறவு கொண் 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/70&oldid=743689" இலிருந்து மீள்விக்கப்பட்டது