பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவாழுக்கம் நீடிக்கின்றது. அது அலராகின்றது. தலே வி கரந்தொழுகும் காமம் தானகவே அக் களவினை வெளிக்காட்டி விடுகின்றது. கண், தோள், முலே முதலிய புணர்ச்சியால் ஏற்பட்ட கதிர்ப்பைப் புலப்படுத்துகின்றன. நற்ருயும் செவிலித் தாயும் அவள் தோற்றத்தில் வேறுபாடு காண்கின்றனர். இவ் வேறுபாடு எதன்ை ஆயிற்று என அறியக் கட்டுவிச்சி யை அழைத்து வினவுகின்றனர். இதற்குக் குறுந்தொகைப்பாடல் ஒன்றில் (குறு. 26) கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கிற காலத்துத் தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம் என்று கூறக் கேட்டுத்தே ழி அறத்தொடு நின்றது ’ என்று துறை விளக்கம் தரப்பட்டுள்ளது குறிஞ்சிப் பாட்டிலும் தலைவியின் வேறுபாட்டிற் குக் காரணம் அறியுநர் வினய் ’ அறிய முயலுங்காலே அறத் தொடு நிற்றல் நிகழுகின்றமை அறிதல் இயலும். கட்டுவிச்சி வினவிற்கு விடையளிக்கின் ருள். சிறுமுறத் தில் நெல்லேப்பரப்பித் தெய்வங்களே அழைத்துப் பாடுகின் ருள் முருகன் மேயும் மைவரை நிலமாம் மலே நிலத்தை - குன்று வளத்தைக் குறித்துப் பாடுகின் ருள் . அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா? இறுதியில் முரு கல்ை நிகழ்ந்தது என்றே கூறி முடிக்கின் ருள். இதனை அகநானூற்றுப்பாடல் ஒன்றின் அடி களும் உறுதிப் படுத்தி நிற்கின் றமை கண்டு மகிழத்தக்க தா கும் (98). கட்டுக் காணலும் அறத் தொடு நிற் றலும் தோழி கற்று நிகழும் இடங்களைக் குறிப்பிடும் தொல்காப் பியச் சூத்திரத்தில் (தொல். பொருள். 12) அடிகட்குச் செவிலி அறி வரை வினு அய்க் குறிபார்க்கும் இடத்தினும் தோரி அறத் தொடு நில வகை யான் குற்றந் தீர்ந் த கிளவியைத் தாய் மாட்டுச் சொல்லுதலுண்டு என்று இளம்பூரணர் உரைவிளக்க ம் தருகின்ருர். மேலும் தொல்காப்பியம் தோழி அறத்தொடு நிற்றலைப் பற்றிக் கூறும் சூத்திரத்திற்குப் (தொல். பொருள் . 203) பொருள் கூறிய நச்சிகுர்க்கினியர் கட்டுக்கானிய நின்ற விடத்து அறத் தொடு நின்றது” என்று ஒரு பகுதியினைப் புலப் படுத்திக்காட்டிக், கட்டுக் காண்டல் அறத்தொடு நிற்றற்குக் காரணமாதல் உண்டு என்பதன உறுதிப்படுத்துகிருர் . 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/74&oldid=743693" இலிருந்து மீள்விக்கப்பட்டது