பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுாற்றில் காஞ்சித்திணை திரு. சு. முருகன் அரசினர் கல்லூரி, சித்துரர் புறப்பொருள் நிகழ்ச்சிகளே ஏழு திணைகளாக வகுத்தார் தொல் காப்பியர். அதில் ஒன்று காஞ்சித்தினே. காஞ்சித் திணையை இருவகையாகத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்கு கின்றன. அகத்திணை ஏழனுள் ஒன்ருகிய பெருந்திணையின் புறமென்றும் அது நிலையாமையை உணர்த்துகின்றதென்றும் தொல் காப்பியர் குறிப்பிடுகிரு.ர். இத்திணை வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலேயாமை யைச் சான்ருேர் சாற்றும் குறிப்பினது என்றும் இது பெருந் திணையின் புறன் என்றும் பொருள்படும். பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலே முதலியவற்றில் போர் மேற்செல் வோரை எதிர்ப்போர் செயலாகக் கூறப்படும் செயல் காஞ்சித் திணை. ‘வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே என்பது பன்னிருபடலம். காஞ்சித்திணையின் துறைகளை விளக்கும் தொல்காப்பியர் ஃமாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்.’’ என்று தொடங்கும் நூற்பாவில் பெருங்காஞ்சி, முது காஞ்சி, மறக் காஞ்சி, பேய்ப் பக்கம், மன் &னக் காஞ்சி, வஞ்சினக் காஞ்சி, தொடக்காஞ்சி, ஆஞ்சிக் காஞ்சி, மகட்பாற்காஞ்சி, தலையொடு முடிந்த நிலே என்ற பத்துத்துறைகளையும் ஒரு பகுதியாகவும் பூசல் மயக்கம், தாங்கரும்பையுள், மூதானந்தம் முது பாலே, கையறு நிலs தபுதார நிலை, தாபத நிலை, மாலேசொல் நிலே, தலைப்பெயல்நிலை, 69 閏

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/77&oldid=743696" இலிருந்து மீள்விக்கப்பட்டது