பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்தோர், தந்தை முதலியோர் வீரத்தன்மையைச் சுட்டிய கால் மகள் மறுத்தவழி நிகழும் போரை அவர்களும் எதிர்பார்க் கின்றர்கள் என்பதையும் உணர்த்துகிருர். புறம் 347-ல் மகட்கொடை வேண்டிவந்த அரசர்தம் போர் யாக களுடன் வந்து அவ்யானைகளைக் கட்டுதலால் வேர்கள் தளர் இது அ ைசயத் தொடங்கின. இவ்வூரின் நிலை என்ன ஆகுமோ என்று குறிப்பிடுகிரு.ர். மற்ற பாடல்களில் பெரும்பாலானவை மகள் மறுத்தல் பற்றிய மாகவே அமைந்துள்ளது. வஞ்சினக் காஞ்சி இன்னது பிழைப்பின் இது வாகியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்’ ’ என்பது வஞ்சினக் காஞ்சி என்னும் துறைக்குத் தொல் காப்பியர் தரும் இலக்கணம். அதுதான் செய்யக் கருதி யது பொய்த்துத் தனக்கு வருங்குற்றத்தால் உயிர் முதலியன துறப்பனென் றல் சிறப்பு வீடுபேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு என்றும் விளக்கம் தருவர். புறப்பொருள் வெண்பா மாலேயார் வெஞ்சின வேந்தன் வேற்றவர் பிணிப்ப வஞ்சினங் கூறிய வகை மொழிந்தன்று ’ என்று வஞ்சினக்காஞ்சிக்கு இலக்கணம் வகுத்துள்ளார். பகையரசர் சிங்கம் போல் சினந்து தம்மு ன் ஒன்று கூடி தன் இன எதிர்க்க முற்பட்டுப் போருக்கு வருகின்றர்கள் என்ற செய்தியைக் கேள்வியுற்ற நிலையில் பூதப்பாண்டியன் வஞ்சினம் சாற்றிப் பாடுகின் ருன். இங்ங்ணம் வஞ்சினம் கூறுங் கால் அவர்கள் தத்தம் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாகவும், பெருமையாகவும் கருதுகின் ருர்களோ அவற்றை இழந்து விட்ட றிலே யை அடைவதாகச் சொல்வார்கள். பூதப்பாண்டியன் தன் இன எதிர்த்து வந்த பகைவர்களே வெற்றிகொண்டு புறங் காட்டி ஒடச் செய்யவில்லை என்ருல் இன்னது புரிவேன் எனச் குள் உரைக் கிருன். 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/81&oldid=743701" இலிருந்து மீள்விக்கப்பட்டது