பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழியிசை யெச்சம் “ஒழியி ைச யெச்சம் ஒழியிசை முடியின’ (தொல். சொல். 434) என்பது தொல்காப்பியம். கூரியதோர் வாள்மன்” என்பதில் உள்ள மன்’ என்பதற்குத் திட்பமின்று’ என்பது எச்சமாகும். “வருகதில் அம்ம எம்சேரிசேர” என்ற தொடரில் உள்ள “தில்’ என்பதற்கு, வந்தால் இன்னது செய்வேன்’ என்பது எச்சமாகும். ‘கொளலோ கொண்டான்’ என்பதில் உள்ள ஒகாரத்துக்குக் கொண்டுய்யப் போமாறறிந்திலன்’ என்பது எச்சமாகும். அவ் வெச்சங்கள் மன், தில், ஒ என்ற இடைச் சொற்களே முடிக்கின் றன. அதல்ை அவ்வி ைடச் சொற்கள் ஒழியிசை எச்சங்களாயின. ஒழியிசை என்பதற்குச் சொல்லவேண்டியிருந்தும் சொல்லாது விடுபட்ட சொற்கள் எனப் பொருள் கொள்க. வாளின் திட்ப மின் மை சொல்லப் பெறவேண்டுவது. அது சொல்லப்பெறவில்லை. என்ருலும் எஞ்சியிருப்பதாகக் கொள்ள வேண்டும். ஒழியிசைப் பொருளில் வரும் இடைச் சொற்கள் மன், தில், ஒ ஆகியவையாம். மன், தில் ஆகியவை ஒழியிசைப் பொருளே யன்றிக் கழிவு, இரக்கம் முதலிய பொருள்களிலும் வரும். அவை பற்றிய எச் சங்கள் சொல்லப்பெற வில்லே. ஒழியிசை எச்ச முடிபும் தொடரிலேயே அமையவில்லே. எதிர்மறை யெச்சம் ‘எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடியின’ (தொல்-சொல்-435) என்பது தொல்காப்பியம். இவ்வெச்சப் பொருளில் ஏகாரம் ஒகாரம், உம்மை ஆகிய இடைச்சொற்கள் வரும். யானே கொள்வேன் ’, ‘யானே கள் வேன்’, ‘வரலும் உரியன் ஆகிய இம்மூன்றிலும் உள்ள இடைச் சொற்கள், நேரே கொள்வேன், கள்வேன், உரியன் என்பனவற்றைக் கொண்டு முடியாமல் முறையே கொள்ளேன்’, ‘கள்ளேன்’ வாரா மையும் உரியன்’ என்ற எதிர்மறைச் சொற்களால் முடிந்தன. எதிர்மறைச் சொற்கள் எச் சங்கள். இவற்ருல் முடிக் கப்படுவன எதிர்மறை எச்சங்கள் எனப்பட்டன. எதிர்மறை எச்ச முடிபும் தொடரி லேயே அமையவில்லே. 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/88&oldid=743708" இலிருந்து மீள்விக்கப்பட்டது