பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிப்படையில் கூருது நாம் நினைந்து கொள்ளும்படி விட்டார். அப்பிறிதொரு கருத்தே எச்சம் ஆகும். அப்பிறிதொரு கருத்தா வது "கீயா ரைத் தொடக்கத்திலேயே அழிக்க' என்பதாகும். இக் கருத்தால்தான் குறள் முடிக்கப்பெறுகிறது. இக் கருத்து குறிப்பால் கொண்டதாதலின் அக் குறள் குறிப்பெச் சத்துக் குரிய தாயிற்று. Pመመ� யெச்சம் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு. (குறள். 1) என்பதில், எழுத்தெல்லாம் அகரமாகிய முதலேயுடையன; உலக மும் ஆதிபகவனகிய முதலேயுடையது” என்ற இரண்டு தொடர் கள் உள்ளன. இவற்றை உவமையும் பொருளும் ஆக்க வேண்டி அனு போல’ என்ற இரண்டு சொற்கள் வருவிக்க வேண்டும். எனவே இரண்டு சொற்கள் எஞ்சியுள்ளன. அவ் எச்சத்தை இரண்டு தொடர்களும் எதிர்நோக்கியிருத்தலால் அச்சொற்கள் அத்தொடர்களே முடிக்கின்றன . அதல்ை இக்குறள் இசை யெச் சத்துக் குரியதாயிற்று. இசை என்ருல் சொல். இரண்டு முதலிய சொற்கள் எஞ்சியிருந்தால் இசை யெச்சம். ஒரு சொல் எஞ்சியிருந்தால் சொல்லெச்சம். எச்ச முடிபுகள் பிரிநிலை யெச்சம் பிரிநிலே முடிபுடையது; வினை யெச் சம் வினேயொடு முடியும்; பெயரெச் சம் பெயரொடு முடியும்; ஒழியி ைச யெச்சம் ஒழியிசை முடிபின; எதிர்மறை யெச்சம் எதிர்மறையொடு முடியும்; உம்மை உம்மை முடிபுடையது: என எச்சம் வினேயொடு முடியும். இப்படி ஒவ்வொன்றிற்கும் முடிபு கூறிய ஆசிரியர் தொல்காப்பியர் சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய மூன்றற்கும் முடிபு கூறவில்லே. முடிபு இல்லேயென்றே சொல்லிவிட்டார். அதாவது அம்மூன்றையும் முடிப்பதற்குரிய சொற்கள் இல்லே யென் ருர். குறிப்பில்ை தான் தெரிந்து முடித்துக் கொள்ளவேண்டும் என் ருர். 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/91&oldid=743712" இலிருந்து மீள்விக்கப்பட்டது