பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திலள் என்றும் பொருள் கொள்ள இடமுள்ளதை அடியார்க்கு நல்லார் சுட்டுகின் ருர். கண்ணகியின் அவல நிலை குறித்து நிலமகளே வருந்துவ தாகச் சில இடங்களில் குறிப்பிட்டுவிட்ட இளங்கோவடிகள் கண்ணகியின் துன்பத்தை அவளே அறியவில்லையென்ருே, அறிந்திருந்தும் நெகிழவில்லையென்றே கருதிச் சுட்ட இட முண்டோ ? உலகினர் கண்களுக்குக் கண்ணகியின் சீறடிகள் கொப் புளங்கொண்டு வருந்துதல் போலத் தோன்றலாம்; மெல்லிய சீறடிகள் நிலமகளை உறுத்தாத இயல்பினவாகவும் இருக்கலாம். என்ருலும் இளங்கோவின் அகக் கண்களுக்குக் கண்ணகியின் தெய்வத் தனமை மின்னல் வெட்டுப் போலத் தோன்றிக் கொண்டே இருத்தலால் (பொதுவாகத் தெய்வத்தின் திருவடி கள் நிலத்திற் படியா எனும் கொள்கைக்கேற்ப) அவள் சீறடி களும் நிலத்திற் படியாதனவாகவே தோன்றுகின்றன. இக் கருத்தை உட் கிடை யாகச் சொல்ல நினைக்கும் அவர், கவுந்தி யடிகளின் கூற்ருகவே கண்ணகியைத் தெய்வமாகவே பாராட் டித் துதியும் பாடிவிடுகிறர்; இதனைக், கடுங்க திர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குது ய ரெய்தி நாப்புலர வாடித் தன் றுயர் காணுத் த ைகசால் பூங்கொடி இன்றுணே மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம் பூண்ட வித்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் எனும் அடைக் கலக் காதைப் (139-144) பகுதியுள் நோக்குக. 4. மாதவி வீட்டில் கோவலனுக்காக ஆர்வமுடன் சமை யல் செய் கிருள் கண் ண கி. உணவு படைத் தற்கு முன்னதாகக் கோவலன் திருவடிகளை நீரிட்டுக் கழுவித் தொழுகிருள், தரை மீது நீர் தெளிக் கிருள் ; அந்தச் செயலானது மயக்கமுற்றிருக் கும் நிலமகளே மயக்கந் தெளிவித்தாற்போல இருக்கின்றதாம்! கண்ணகிக்கும் கோவலனுக்கும் நேர விருக்கின்ற துன்பத்தை 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/98&oldid=743719" இலிருந்து மீள்விக்கப்பட்டது