பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பெருமையும் பொருந்தியிருந்தது இக் காஞ்சிக் கடிகை என்று கொள்ளலாம்.

எத்தகைய கல்வி

மயூரசர்மன், தார்க்குக'னாகக் காஞ்சிக்குச் சென்றான் என்று சொல்லப்படுகிறது. (கடிகாம் விவேச தார்க்குகா:). தார்க்குகன் என்பது யாசகன் என்று பொருள்படும். இதனால் அறிவை யாசித்தற்கு மயூரசன்மன் சென்றான் என்று தெரிகிறது. மயூரசன்மன் தான் மட்டும் செல்லவில்லை; தன் ஆசிரியன் வீரசர்மனுடன் சென்றான். பிரவசனம் முழுவதையும் கற்க விழைந்து அங்கு இருவரும் சென்றனர். (அதி ஜிகாம்ஸுஹ் ப்ரவசநம் நிகிலம்.) இதனால் வேதங்களைப் பிரவசனம் செய்யச் சென்றமை அறிய வருகிறது. பிரவசனம் செய்தலாவது கூர்ந்து ஆய்ந்து கற்பது என்று பொருள்படும். ஆசிரியனும் மாணவனும் ஆகிய இருவரும் வேதங்களில் ஆராய்ச்சிக் கல்வி கற்றற்பொருட்டுச் சென்றனர்போலும். பல்லவ மன்னனுகிய நந்திவர்மனது காசாக்குடிச் செப்பேடுகளும், கடிகையில் நான்கு வேதங்களும் கற்பித்தனர் என்று கூறுகின்றன. (சாதுர்வேத்யமவீவ்ருதத் ஸ்வகடிகாம் பூதேவ தாபக்திதா.) எனவே காஞ்சி கடிகாவில் வேத ஆராய்ச்சிக் கல்வியே கற்பிக்கப் பெற்றது என்பது தெளிவு.

கடிகையும் பல்லவ அரசரும்

காஞ்சிக் கடிகா பல்லவ அரசரது மேற்பார்வையில் இருந்தது. அவர்களுடைய ஆதரவிலேயே சிறப்புடன் திகழ்ந்தது. பல்லவ அரசர் யாவரும் அதனைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தனர். அதனிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தனர். பல்லவர் ஆதரவில் திகழ்ந்த இக் கடிகையில் கதம்ப அரசைத் தோற்றுவித்த மயூரசர்மன் (முன்னர்க் கூறியது போலப் படிக்க வந்தவன்) முற்றக் கற்க முடியாதவனானான். ஒரு சமயம் பல்லவருடைய குதிரைச் சேகவனுக்கும் மயூரசர்மனுக்கும் கடுமையாகச் சண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/10&oldid=970838" இலிருந்து மீள்விக்கப்பட்டது