சாதனைசெய் தேசினந்தாள் கார்த்திகைக்குங்
கொடைவேந் தாசகிமார் கழியார்கோ தையுமாசி லாமல் காதலுடன் சேர்வனவல்ல திட்டமுன் பங் குனிப்பார்
கந்தனெனும் கலியாண சுந்தரமா முகிலே.
இது திருவாரூர்ச் சொக்கலிங்கக் கவிராயர் பாடிய பாட லாகும். (தனிப் பாடல் திரட்டில் காண்க).
இப்பாடலில் பன்னிரண்டு மாதப்பெயர்களும் தொனி யால் குறிக்கப்பெற்றுள்ளன. ஆளுல் அச்சொற்கள் பிரிந்தி சைத்து வேறு பொருள் படுமாற்றைப் பின்வரும் உரையால் அறிக:
மாது அஞ்சித் திரைக் கடலை வைதனள் தலைவி பயந்து (மன்மதனின் முரசாகிய) திரையுடைய கடலைப்பழித்தாள்: சின்னம் (சினம்) சிறியாளே-மிகவும் இளமையானவ8ள; ஆனி பெருக்கும். துன்பம் செய்கின்ற; போது அம்பன் போர் ஆடின்ை-மலர்களை உடைய மன்மதன் போரிட்டான்; ஐயா ஐயனே; அணியாய்ப் புரட்டா-அழகாகப் புரண்டு; தின்கலம் வெறுத்தாள்-உண்ணும் உணவை வெறுத்தனள்; ஐப்பசி இல் என்றே நல்ல பசி இல்லை என்று; சாதனை செய்தே சினந் தாள்; சாதித்துக் கோபித்தாள்; கார் திகைக்கும் கொடை வேந்தா-மேகம் திகிலடையுமாறு கொடையுடைய அரசனே; நீ அன்புவைகா-நீ அவளிடம் அன்பு வைப்பாயாக; அவளேக் காப்பாயாக, சகிமார் கழியார்-தோழியர் உன்னை நீக்க மாட்டார்கள்; கோதையும் - தலைவியும்; மாசு இலாமல்குற்றம் இல்லாமல்; காதலுடன் சேர்வள் - விருப்பத்துடன் கூடுவாள்; நல்ல திட்டம் உனக்கு நல்ல அதிர்ஷ்டம்; உன் பங்கு உணிப்பார்-நீ செய்ய வேண்டியதை யோசித்துப்பார்.
பலபட்ட்டைச் சொக்கநாதப் புலவர் பாடிய அழகர் கிள்ளே விடுது தில் சில ஆறுகளின் பெயர்கள் தொனியால் குறிக்கப்பெற்றுள்ளன. தேறு னி காவேரி சிந்து கோதா