விரியும்’ என்பது அவ்வரி (கண்ணி 33). தேறு-ஆராயின், கனி பழங்ளைத்தரும், கா-சோலையில், வேரி-தேனை, சிந்துசிந்துகின்ற, கோதா-சக்கையாக, இரியும்-வீணாகும் என்பது பொருள். கனி - கன்னி. இதில் கன்னி, காவேரி, சிந்து, கோதாவரி என்று நான்கு ஆறுகளின் பெயர்கள் தொனியால் குறிக்கப்பெற்றிருத்தலேக் காணலாம்.
இந்நூல் 163 ஆவது கண்ணி: “அரசா யிருத்தியா லத்தி எடுத்து” என்பது அரசாக இருக்கும்படி செய்து ஆலத்தி எடுத்து என்று பொருள்படும். இதில் அரசு, ஆல், அத்தி என்ற மரப்பெயர்கள் தொனிக்கின்றன. சொக்கநாதப் புலவர் என்பார் பாடிய தனிப் பாடல்களுள் ஒன்று பின்வருமாறு:
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்திரேல் தேடேன் பெருங்காயம்
முதல்வரி “வெம்மையான உடம்பு சுக்குப்போல ஆளுல் வெம்மையான வினையினுல் வரக்கூடியதென்ன” என்றும், 3-ம் வரி ‘சிறந்த வீட்டினைத் தந்தால் பெரிய உடம்பைத் தேடேன்’ என்றும் பொருள்பட்டு, வெங்காயம், சுக்கு, வெந் தயம், சீரகம், பெருங்காயம் என்ற பலசரக்குத் தொனியால் அமைந்து கிடத்தலைக் காணலாம்.
கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தொனிப் பொருள் அமைப்பதில் ஈடு இனேயில்லாதவர், அப்புலவர் பெருந்தகை பாடிய நூல்களை Dr. சாமிநாதையர் அவர்கள் 1932லேயே அச்சிடுவித்துத் தமிழுலகுக்கு அளித்தருளியுள்ளார்கள். அந்நூல்களுக்குரிய முகவுரை ஆராய்ச்சியுரை முதலியவற்றைமட்டும் படித்தாலே நூலை நன்குபடித்த அறிவு வாசகர்களுக்கு அமைந்துவிடும். இவற்றுள் கோடீச்சுரக் கோவையில் மிகுதியான தொனிகள் காணப்படுகின்றன.