இப்பேதை-கட்டுதலையுடைய அணிகலன்களோடு சேர்த்துக் கூந்தல் முடிக்கப்படாத இப்பெண்”- என்பது இவ்வரிகளின் பொருள். இதில் எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்னும் ஐந்திலக்கணப் பெயரும் தொனித்தல் காணலாம்.
சில ஆறுகளின் பெயர்களும் தொனிக்கின்றன. பின்வரும் பாடலில் (439):
கங்கைகொள் வேணியர் கோ உச்சு ரேசர்தம் காவிரி நாட்(டு)
அங்க யமுனே முலைத்தென் குமரி யனநடையாய்
இங்கினிச் சிந்து நன் கோதா வரியுறை யீர்ந்தொடையார்
அம் கயம் முனைமுலை-அழகிய யானை (க் கொம்பைப்) பொருகின்ற முலையுடைய; தென்குமரி-அழகிய பெண்ணே அனநடையாய்-அன்னம் போலும் நடையுடையவளே; சிந்து நன்கு ஓதா வரி உறை ஈர்ந்தொடையார்-சிந்து என்னும் பாட்டை நன்றாகப்பாடி வண்டுகள் உறைகின்ற குளிர்ந்த மாலையை யணிந்த தலைவர்” -என்பது பொருள். இப்பாடலில் கங்கை, காவிரி என்ற ஆறுகளைக்கூறி. இரண்டு மூன்று வரிகளில் யமுனே, குமரி, சிந்து, கோதாவரி என்னும் ஆறுகளின் பெயர்களைத் தொனியினுல் குறிப்பித்தார்.
இங்ஙனமே சிவப்பிரகாசரும் பின் வரும் பாடலில் ஆறுகளின் பெயர்களைத் தொனிக்கச் செய்துள்ளார்:
பெண்னே சாய்த்துப் பெருகிக் காவேரியின்
நண்ணி ஒதியம் நன்றே வைகை சேர்ந் (து).
எண்ணி கம்பை இயைந்து மணித்திரள்
சில தலங்களின் பெயர்கள் சிவக்கொழுந்து தேசிகர் பாடிய தஞ்சைப் பெருவுடையார் உலாவில் தொனியால் அமைக்கப் பெற்றுள்ளன. (கண்ணி 152-54)