பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4.


மூண்டது. “அந்தோ! இந்தக் கலியுகத்தில் பிராமணர்கள் கூடித்திரியரைக் காட்டிலும் வன்மை குறைந்தவராகவே இருக்கிருர்களே! என்னதான் தாம் குருவைத் தொழுது சீராக வேதத்தைப் படித்தாலும் பிரமசித்தி பெற அரசனது உதவியைத்தானே நாட வேண்டியிருக்கிறது? இதனினும் துன்பந் தரத்தக்கது யாது?” என்று அந்தக் குதிரைச்சேகவன் ஏளனமாகப் பேசினானாம். இதனைக் கேட்டதும் மயூரசர்மன் கொதித்து எழுந்தான்; குசையும் சமிதையும் கற்களும் சுருக்கும் நெய்யும் பிறவும் ஏந்தும் கையில் ஒளி பொருந்திய வாளை ஏந்தினான்; பல்லவனுடைய காவலர்களை வென்று, காஞ்சியை விட்டு ஸ்ரீபர்வதம்வரை பரவியுள்ள அடவியில் புகுந்து சென்றான்.

பல்லவரின் தொடர்ந்த ஆதரவு பல்லவர்க்கும் மயூரசர்மனுக்கும் விரோதம் இருந்தமையால்தான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்தது; மயூரசர்மனும் பிரமசித்தி அடையாது ஓடவேண்டியவனானான்

ஏறத்தாழக் கி. பி. 400க்குச் சிறிது முற்பட்ட காலத்தில் கந்தசிஷ்யன் என்ற பல்லவ அரசன் இருபிறப்பாளர்தம் கடிகாவைச் சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான் என்று வேலூர்ப்பாளையப் பட்டயம் பகர்கின்றது. ‘ஸ்கந்த எலிஷ்ய லததொ பவத்விஜா நாம் கடிகாம் ராஜ்ஞாஹ ஸத்ய ஸேநாஜ் ஜஹாரய:’ (S. I. I. Vol. II, Part V, P. 508, 112-13) என்பது பட்டயத்தில் கண்டது. எனவே நான்காம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிக் கடிகா பகைவர் கைவசப்பட்டுக் கலங்கியது; கந்த சிஷ்யன் (கி.பி. 400-436) மீண்டும் அதைக் கைப்பற்றி நன்னிலையில் அமைத்தான்; பின்னர் இக்கடிகை 8-ஆம் நூற்றண்டின் இறுதி வரையில் சிறந்து விளங்கியது.

சிம்மவிஷ்னு காலத்தில் (கி. பி. 575-615) பாரவி என்னும் சிறந்த வடமொழிப்புலவர் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப் பெற்றார் என்று அவந்திசுந்தரி கதா கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/11&oldid=980686" இலிருந்து மீள்விக்கப்பட்டது