ஒருமையால் உலகை வெல்வார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின் ருர்
அன்பினுல் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்ருர்’ என்று கூறப்பெற்றுள்ளது.
பத்தராய்ப் பணிவார் புராணத்தில், அடியார்கள் இடையருச் சிவ சிந்தனை உடையராவர் என்பதை,
“நின்ருலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்ருலும் துயின்ருலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்ருடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்ருத உணர்வுடையார் தொண்டராம் குணமிக்கார்’
என்று சேக்கிழார் பாடியுள்ளார்.
இத் தொண்டர்களைத் திருநாவுக்கரசு சுவாமிகள் தோட்டிமையுடைய தொண்டர்’ என்று பின்வரும் திருவா ரூர்த் திரு நேரிசைப் பாடலில் கூறுவர்:
"தொழுதகங் குழைய மேவித்
தோட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின் ருர்
அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவண் முத்தம்
அன்றியும் ஏர்கொள் வேரிப்
பொழிலகம் விளங்கு திங்கள்
புதுமுகிழ் சூடி குரே.”
தோட்டிமை என்ற சொல்லைத் தொட்டிமை” என்று கொண்டவரும் உண்டு. தொட்டிமை என்ற சொல் சீவக சிந்தாமணியில் பின்வரும் இடங்களில் பயின்றுள்ளது,