இடம் வேண்டுறையே’’ என்ற விடத்து மாதிமை’ என்ற சொல்லைக் காதல்-ஆசை” என்ற பொருளில் ஞானசம்பந்தர் பயின்றுள்ளார். * ஊர்பலி இச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே’’ என்பது அப்பர் தேவாரம். 'மறி யேறு கரதலத் தீர் மாதிமையேல் உடையீர்’ என்பது சுந் தரர் செந்தமிழ். 'திருதிமை"யால் ஐவரையும் காவல் ஏறி’’ என்ற திருத் தாண்டகத்தில் திருதிமை’ என்ற சொல் பயில்கிறது. அது மனவுறுதி என்று பொருள்படும். இங் ங்னமே தோட்டிமை என்ற சொல்லும் அப்பர்தம் அரும் படைப்பாகவே கொள்ளலாம்.
சொற்பொருள்
- தோட்டி’ என்பது யானையை அடக்குவதற்கு யானேப் பாகர் கையகத்திருக்கும் ஒரு சிறு ஆயுதம் என்பது யாவரும் அறிந்ததே. அதனை அங்குசம்’ என்றும் கூறுவதுண்டு, தோட்டி அல்லது அங்குசம் யானையை அடக்குவதற்குப் பயன்படுவது. எனவே யானையை அடக்குவதே தோட்டி யின் தன்மை’யாகும். தோட்டியின் தன்மை’ என்பதே "தோட்டிமை” எனப்பட்ட"
ஐம்புலன் - யானை
மெய் வாய்கண் மூக்குச்செவி என்பன ஐம்பொறி எனப் படும். பொறி வாயில் ஐந்து-அதாவது ஐம்புலன் எனப் படுபவை சுவை ஒளி யூறு ஒசை நாற்றம்’ என்பன. இறை வன் பொறிவாயில் ஐந்து அவித்தவன்’ ஆவான். இறைவ னுடைய தொண்டர்களும் பொறிவாயில் ஐந்தவித்தவர் களே ஆவர். இவ்வைம்புலன்களை யும் ஐந்து யானைகள் ான்றும் கூறுவர். அவ்வைந்து யானைகளே யும் அடக்க வேண்டும் எனின் ஒரு அங்குசம் வேண்டும். அவ் வங்கு சத்தை உரன்’ என்று உருவகம் ஆகக் கூறுவர் திருவள் (ளகவர்.