பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

தற்கு நச்சினர்க்கினியர், பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கொண்டு ஒழுகுவதனே வாரண வாசியிலுள்ளார் பதம்’ என்று குறிப்பு வரைந்திருக்கிருர். இதல்ை வாரண வாசி என்பது ஒருர் என அறியக் கிடக்கிறது.

குலோத்துங்க சோழனுலா

இவ்வுலா இரண்டாம் குலோத்துங்கன் பேரில் ஒட்ட கூத்தரால் பாடப்பெற்றது. இரண்டாம் குலோத்துங்கன் , விக்கிரம சோழனுடைய மகன்-மேகம் போன்ற நிறத்தை யுடையவன் - துவராபதியில் சந்திரகுலத்தில் தோன்றி மனு குலத்தை வாழ்விக்க வந்தவளே ப்பெற்ற வாரணம் என்பானது மகள் வயிற்றுப் பேரன் - கனகளபன்’ என்று பின்வரும் குலோத்துங்க சோழனுலாக் கண்ணிகளினின்றறியலாம்:

'பெரும்ப ர னி கொண்ட பெருமான்-தரும் புதல்வன்

கொற்றக் குலோத்துங்க சோழன்; குவலயங்கள் முற்றப் புரக்கும் முகில் வண்ணன்- பொற்றுவரை இந்த மரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த- பைந்தளிர்க்கை மாதர்ப் பிடிபெற்ற வாரணம்; அவ்வாரணத்தின் காதற் பெயரன்; கனகளபன்.’’

இதில் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்’ என்பது விக்கிரம சோழனேக் குறிக்கும். இவ்வரிகளுக்குரிய பழையவுரையில், மாதர்ப் பிடி-பெண் சக்கரவர்த்தி. வாரணம் -பெண் சக்கரவர்த்தியின் பிதா, அவர் யோகீசுவரரான காலேயிற் பேர், வார ண வாசித் தேவர்” என்பது காணப்படு கிறது. இவ்வுரைக்கு எழுதப்பெற்ற குறிப்புரையில், வாரண வாசி - இப்பெயருள்ளவூரொன்று அரியலூருக்குத் தென்பா லுள்ளது” என்று உள்ளது. இதல்ை வாரண வாசி என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரியலூர்க்கு அருகில் இருக்கும் ஊர் என்றறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/127&oldid=676662" இலிருந்து மீள்விக்கப்பட்டது