122
மாற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே இரண்டாம் குலோத் துங்க சோழனின் பாட்டனுர் பெயர் வாரணம் என்பதாகும். அவர் யோகிருந்த பின்னர் வாரண வாசித் தேவர் என அழைக்கப்பெற்ருர். அவர் பெயரால் வாரணவாசி என்ற ஊர் அமைக்கப்பெற்றது. இரண்டாம் குலோத்துங்கன் குமரிப் பகுதிக்குத் தன் பாட்டன் பெயரை இட்டனன் என்பனவற்றை அறியலாம். (சங்கப்பாடலில் கூறப்பெற்ற வாரண வாசி இத னின் வேருதல் வேண்டும்).
வாரணவாசி யாறு
திருவதிகைக்கு அருகில் செல்லும் யாற்றை வாரன வாசி யாறு என்ற பெயரால் மூன்ரும் இராசராச சோழனுடைய திரு வயிந்திரபுரக் கல்வெட்டு (4) உணர்த்துகின்றது. மூன்ரும் இராசராசசோழன் அரசனைதும், கி. பி. 1219இல் மாறவர் மன் சுந்தரபாண்டியன் என்பான் சோழநாட்டின் மேல் படை யெடுத்து வந்து, சோழ நாட்டில் பல அழிவு வேலைகளைச் செய்து, சோழ நாட்டைத் தனதாக்கிப் பின் பொன்னமராவதி யில் தங்கியிருந்து, இராசராசனேயழைத்து அவனுக்குச் சோணுட்டை வழங்கினன். மீண்டும் கி. பி. 1231இல் இம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாவது தடவை சோனுட்டின் மேல் படையெடுத்து வந்தான். மூன்ரும் இராச ராசன் தோற்று வடக்கு நோக்கி யோடினன். அப்பொழுது கோப்பெருஞ் சிங்கன் என்பான், சோழனைத் தெள்ளாறு என்ற ஊரில் போரில் வென்று, தன் தலைநகராகிய சேந்தமங்கலத்தில் சிறையிட்டான். இதனேக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன், கோப்பெருஞ் சிங் கனது நாட்டை அழிவுக்குட் படுத்தி, அவனே அஞ்சுவித்து, மூன் ரும் இராசராச சோழனே விடுவித்தான். இங்ங்னம் இராசராசனைச் சிறையினின்று மீட்ட வரலாறு திருவயிந்திரபுரக் கல்வெட்டால் அறியவரு கின்றது. அதில் போசள வீரநரசிம்மனின் தண்டநாயகன், 'திருவதிகை திருவக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு, சேந்தமங்கலத்துக்குக்